09-25-2005, 03:27 AM
கனடா நாட்டின் ஒன்ராறியோ மாநிலத்திலுள்ள வோட்டர்லு} பகுதியில் வாகனம் மோதியதில் ரொரண்ரோவைச் சேர்ந்த சகோதரர்களான இரு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் வோட்டர்லு}வைச் சேர்ந்த மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சௌமியன் நகுலசிகாமணி (அகவை 19) மற்றும் சந்திரசேகர் நகுலசிகாமணி (அகவை 21) ஆகிய சகோதரர்களே கொல்லப்பட்டுள்ளனர். தமக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் உள்ள வீதியொன்றிலிருந்து இவர்களது சடலங்களை தாம் மீட்டதாகவும் இவர்களை மோதிவிட்டு தப்பியோடிய வாகனத்தை தாங்கள் தேடிவருவதாக அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் வோட்டர்லு} பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மலரவன்
மலரவன்

