11-11-2003, 08:18 AM
kuruvikal Wrote:அடடா சின்னப்பையா
நீர் என்ன காதலோ கொள்கிறீர்....
மாணிக்கவாசகனும்
ஆண்டாளும்
காட்டாத காதலா
காட்டுறியள்.....!
காதல் என்று
கண்ட கன்னியர் பின்
றோட்டில் அலையும் கூத்தும்
பள்ளிப் பருவத்தில்
படிப்புவிட்டு காதலோடா..?!
சொல்லடா தம்பி
உன் காதலுக்கு வரைவிலக்கணம்.....!
உள்ள சினிமாச் சிங்காரிகள்
படம் போட்டு வரிபடிக்கும்
சின்னப்பையன் - நீ
சினிமாவால் காமத்தால்
கட்டுண்ட கதை சொல்வது
வேடிக்கை பையா....!
பொய்யுரைத்தே பழகிப்போன
உள்ளங்களுக்கு
தானெடுத்த நிலைதெரியாதோ.....!
சற்று திரும்பிப்பார்
பள்ளியிலே காதலென்று
பரிசு பெற்ற தங்கையவள்
வீட்டுக்குள் இயந்திரமாய்
உனக்கோர் அடிமையாய்
தன்னிலை கெட்டுக் கிடக்கிறாள்...!
அன்றில்
ஊர் சுற்றும் தறிகெட்ட நிலையானாள்....!
இப்படி எத்தனையோ சங்கதிகள்...!
காலம் மாறும்
இளமை கலையும்
காதலென்று
கொண்ட வெறி கலையும்
அப்போ சந்திப்பாய்
எது உண்மை என்று....!
அதுவரை
நம் வரிகளின் ஓசை
செவிடன் காதில் சங்காமே...!
நன்றி வணக்கம்...!
:evil: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:
நாங்கள் தொட்டுக் கொள்ளவில்லை
முட்டிக் கொள்ளவில்லை
நமக்குள் இனிதான ஒரு உலகம்
உள்ளிருந்ததை இவர் அறியார்.
அது உனக்கும் எனக்குமான உலகம்.
நம்முலகு காதல் உலகாம்,
காமத்தீ பற்றியெரியும் புற்றாம்,
களவாகச் சுவையுணரும்,
கள்வர் வாழுலகாம்,
புலம்புகிறார் புலவர் பலர்.
அழுக்கையே தின்னுமிவர் முன்
அதாமும் ஏவாளும் என்ன
ஈசனும் , அம்மையும் கூட
உடல் தீண்டும் பண்டம்தான்.
வரிவடிப்பில் வல்ல கம்பராய்
கவிவடிக்கும் கண்ணில்லாக் குருடரிவர்.
உதடுரசல் , உடலுரசல்
இதுமட்டுமே காதலென உணர்ந்தவரின்
கண்ணிலினி நாம் வரவே வேண்டாம்.
இது காதல் இவர்க்கெல்லாம் புரியாத
புது உலகு.
09.11.03.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: