Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதி தேர்தலில் எவரையும் தமிழ் கூட்டமைப்பு ஆதரிக்காது
#1
ஜனாதிபதி தேர்தலில் எவரையும் தமிழ் கூட்டமைப்பு ஆதரிக்காது
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவருக்கும் ஆதரவாக வாக்களிப்பதில்லையென திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சாதகமான எந்தவொரு திட்டத்தையும் முன் வைக்காததன் விளைவாகவே இந்த நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்த பின்னரே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது சமாதானத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த பற்றுறுதி வெளிக்கொணரப்பட்ட போதும் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த ஐ. தே. முன்னணி அரசை பதவியில் இருந்து தூக்கி எறிந்த தென்னிலங்கை சிங்கள மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிப் பீடமேற ஆணை வழங்கினர். இதனால் சமாதானப் பேச்சுவார்த்தையில் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு நம்பிக்கையில்லையென்பது தெளிவாகியது.

ஆகையால் ஜனாதிபதி தேர்தலிலும் யாரை தெரிவு செய்ய வேண்டுமென்பதை தென்னிலங்கை சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டுமென தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கருதுகிறது


http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
ஜனாதிபதி தேர்தலில் எவரையும் தமிழ் கூட்டமைப்பு ஆதரிக்காது - by வினித் - 09-24-2005, 08:03 PM
[No subject] - by கீதா - 09-24-2005, 08:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)