Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒருவாரத்தினுள் குடாநாடு கைவசமாகும்..
#1
போர் வலிந்து திணிக்கப்பட்டால்
குடாநாடு ஒருவார காலத்தினுள் கைவசமாகும்
(வடமராட்சி)

நடைமுறையிலுள்ள தமிழீழ அரசாங்கத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டுமெனக் கோரி 30 ஆம் திகதி நடத்துவதற்கு யாழ். பல்கலைக்கழக சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பொங்கு தமிழ் எழுச்சி மாநாட்டை சிறப்பிக்கும் வண்ணம் பிரதேசங்கள் தோறும் எழுச்சிக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் பருத்தித்துறையிலுள்ள பொது அமைப்புக்களுக்கான பொங்கு தமிழ் ஏற்பாடு தொடர்பான கூட்டம் பருத்தித்துறை சுப்பர் மடம் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் ஜோன் பொஸ்கோ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் சர்வதேச மாணவர் பேரவையைச் சேர்ந்த பிரபா ஆகியோர் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் இப்பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்திப் பேசினார்.

கஜேந்திரன் எம்.பி. மேலும் பேசுகையில்:

நாம் போரை வலிந்து ஏற்படுத்தவில்லை. எமது மக்களும் சமாதானம் மூலமே எமது உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். எனினும் எம்மீது வலிந்து போர் ஒன்று திணிக்கப்படுமானால் ஒரு வார காலத்திற்குள் யாழ். குடாநாடு பிடிக்கப்படும் என அறைகூவல் விடுத்தார்.

இவ் எழுச்சிக் கூட்டத்தில் பருத்தித்துறைப் பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதேவேளை வடமராட்சி வடக்குப் பிரதேசத்திலுள்ள கடற்றொழிலாளர் சங்கங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் பொங்கு தமிழ் தொடர்பான விழிப்புணர்வுகளை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான கூட்டங்களை நடத்துவதெனவும் முடிவு எடுக்கப்பட்டது.


http://www.virakesari.lk/VIRA/20050925/pol...cal_news.htm#p1
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
ஒருவாரத்தினுள் குடாநாடு கைவசமாகும்.. - by வினித் - 09-24-2005, 07:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)