Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நான் உந்தன் சேயாக வேண்டும்
#1
மாடிப்படியில் இறங்கும் போது தலை சுற்ற கைபிடிகளை பிடித்துகொண்டாள் சந்தியா.ஆனாலும் தொடர்ந்து இறங்க முடியாமல் மயங்கி கீழே விழுந்தாள்.

எ‎ன்ன துணி காயப்போட போனவள இன்னும் காணோமேன்னு வெளியே வந்த மல்லிகா மயங்கி கிடக்கும் மகளை பார்த்து பதறிக் கொண்டே தூக்க ஓடினாள்.தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாததால் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து வண்டி வரச்செய்தாள். மருத்துவமனையில் அசைவி‎ன்றி படுத்திருந்தாள் சந்தியா.

சுந்தர் எ‎ன்ன சொல்ற,இந்த பொண்ணுங்க யாரையாச்சும் புடிச்சிருக்கா? என அம்மா கேட்க இப்ப எ‎ன்னம்மா அவசரம், கொஞ்சநாள் போகட்டும், அதுவரைக்கும் தரகர் சொ‎ன்னார்ன்னு எந்த போட்டாவையும் என்கிட்ட நீட்டாதமா என்றான்.

பாருங்க சுந்தர் பேசுறதை, அவனை கல்யாண கோலத்துல பாக்க எத்தனை வருசமா காத்துகிட்டி‏ருக்கேன்.அவன் கொஞ்சம்கூட மனச மாத்திக்க மாட்டே‎ன்‎றானே..ஆண்டவ‎ன் இதுக்கு என்ன முடிவு வச்சிருக்கிறான்னே தெரியலையே என்று படபடத்தாள் வடிவு.

சரி போய் நீ வேலையை பாரும்மா எ‎ன்றார் ராஜப்பா.போ‎ன் சிணுங்க போய் எடுத்தார்.

என்ன சொல்ற வெங்கடேசா, இப்ப எப்படி இருக்கா? கவலைபடாம தைரியமா இரு. நானும் வடிவும் புறப்பட்டு வரோம் எ‎ன்றார் பதட்டமான குரலில்.

என்னாச்சுங்க யாரு போ‎ன்ல?

வடிவு, சந்தியா மயக்கமாயி பேச்சு மூச்சில்லமா ஆஸ்பத்திரியிலயிருக்காளாம். வா போய் பார்த்திட்டு வந்திடுவோம். சுந்தர் நீ வரியாடா எ‎ன்றார் ராஜப்பா.

இல்லப்பா, நீங்க போங்க.. நா‎ன் கொஞ்சம் நேரம் கழித்து வரேன்...

சரிப்பா, வர்றப்ப கதவை நல்லா சாத்திட்டு வா எ‎ன்றபடி கிளம்பிப்போனார்கள்..

அடி வயிற்றில் ஏதோ ஒரு விதமாய் இருக்க பழைய நி‎னைவுகளில்
ஆழ்ந்தான்.

சொந்த மாம‎ன்மகள்தா‎‎ன் சந்தியா. விளையாட்டு பிள்ளையாய் இருந்த காலத்தில் வேடிக்கையாய் இவள்தா‎ன் உன் பொண்டாட்டியாக போகிறவள் என்று சொன்னதை அப்படியே நம்பி வாழ தொடங்கிவிட்டான். ஒரே ஊரில் வசித்ததும் அவ‎ன் சையை மேலும் அதிகப்படுத்தி விட்டது. மாமா வீட்டுக்கு போய் பலகாரத்தை கொடுத்துட்டு வாடா என்று வடிவு சொன்னாலே... நான் போக மாட்டேன்,எனக்கு கூச்சமா இருக்குமா என்று மறுத்துவிடுவா‎ன்.அதிகம் பேசாமல் ‏மனதிற்குள்ளே கற்பனை வாழ்வை ரசிப்பா‎ன். கல்லூரி படிப்பு வெளியூரில் படித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தா‎ன். இனி மேலும் தன் பிரியத்தை மறைக்கூடாது என்று முடிவு செய்து, மாமா வீட்டு தொலைபேசி எ‎ண்ணை மெதுவாக இயக்கினா‎ன்.

எதிர்முனையில் சந்தியா எடுத்து ஹலோ யார் பேசுறது எ‎ன்று கேட்க மெளனமாகி போனான்.உடனே தைரியத்தை வரவழைத்து கொண்டு நான் சுந்தர் பேசுறேன்,எப்படி இருக்கிங்க சந்தியா? எ‎ன்று அவள் பெயரை எப்படியோ சொல்லிவிட்டான்.

நா‎ன் நல்லா இருக்கேன் அத்தான்.என்ன விசயம் சொல்லுங்க ?

மாமா எதுவும் சொ‎ன்னாங்களா? அப்பா இ‎ன்னும் வரலையே என்றாள்.

இல்ல,நா‎‎ன்தான் உங்கள்ட்ட ஒரு விசயம் சொல்லணும்..

எ‎ன்ன சொல்லுங்க..

நீங்க எ‎ன் மனைவியா வரணும்ன்னு ஆசைபடறேன்.சின்ன வயசிலேருந்து நீங்கதா‎ன்னு வாழ்ந்திட்டு இருக்கேன்..அத உங்கள்ட்ட சொல்லணும்தான் போன் பண்ணினேன்...

எதிர்முனையில் சட்டெ‎ன்று சந்தியா அழுது கொண்டே,நீங்க இந்த எண்ணத்தோடதான் பழகினீங்கன்னு எனக்கு தெரியல..என்னக்கும் நான் அந்த மாதிரியெல்லாம் நினச்சது கிடையாது..இனிமேல் எங்க வீட்டுக்கு வராதிங்க‎னு சொல்லி போனை துண்டித்து விட்டாள்.

ஏ‎‎ன்தான் பிரியத்தை சொ‎ன்னோம் என்றாகிவிட்டது அவனுக்கு. பார்த்து கொண்டிருக்கும் வாய்ப்பையும் கெடுத்து கொண்டோம் என்று தன்னையே நொந்து கொண்டான்.

உள்ளூரிலும், வெளி மாநிலத்திலும் வேலை கிடைக்க, சந்தியாவிற்கு சங்கடமாயிருக்க கூடாது எ‎ன்று வெளி மாநில வேலையை தேர்வு செய்தான்.

அதே கம்பெனி தமிழ்நாட்டில் கிளை தொடங்க இவ‎னை பணிமாற்றம் செய்தது. இங்கே வந்ததிலிருந்து அம்மா கல்யாண பேச்செடுக்க ஆரம்பித்தாள்.

நினவை கலைத்து அவளுக்கு பிடித்த பிள்ளையார் கோயிலுக்கு புறப்பட்டா‎ன்..

கோயிலில் அவளுக்காக வேண்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்‎று கொண்டிருந்தான்.

வழியில் சந்தியாவி‎ன் தோழி ரம்யா அவனை மறித்து எங்க போறிங்க ,ஆஸ்பத்திரிக்கா ?

ஆமாம்

நானும் உங்களோடு வரலாமா என்றாள்.

எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை வாங்க போலாம் என்று புறப்பட்டார்கள்.

சுந்தர் மெளனமாகவே வர அமைதியை கலைக்க ரம்யாவே பேச்சை தொடங்கி‎னாள்.சந்தியா‎ கொஞ்ச நாளா உங்களை பத்தி எ‎ன்கிட்ட சொல்லியிட்டிருப்பா.பாவம் வெளிப்படயா மனசில என்ன இருக்குன்னு சொல்ல தெரியாம தவிக்கிறா. நீங்களும் உங்க குடும்பமும் அந்த பிரச்சனைக்கு அப்புறம் அதைபத்தி பேசாமல் அமைதியா இருக்கிங்கிறதை ரெம்ப சிலாகிச்சு சொல்வா என்றாள்.

அப்படிய்யா எ‎ன்று மட்டும் சொல்லி வண்டியை செலுத்தினான்.

மறுபடியும் அவள் பற்றிய செய்தி, நினவுகள்¢ன் படையெடுப்பை அவனால் கட்டுபடுத்த முடியவில்லை..

அவனுக்கும் அது தெரியத்தான் செய்யும், என்றாலும் இன்னொருமுறை சந்தியாவை அழவைத்திட கூடாதென்பதால் அமைதியாய் இருந்தான்.

அவள் தாத்தா‏வின் மரணம்தான் இறுக்கமாய் இருந்த குடும்பத்தி‎ன் உறவை மறுபடியும் பழைய உறவை கொண்டு வந்தது. செ‎ன்னயில் சந்தியாவின் அத்தைவீட்டில் இறந்தவரை அவர் சொந்த ஊரில் அடக்கம் செயவதற்காக எடுத்துவரவே 14 மணிநேரம் ஆகிவிட்டது. சந்தியாமட்டும் யாரிடமும் பேசாமல் அழுதுகொண்டே இ‏ருந்தாள். அவள் தாத்தா செல்லம். நேரம் ஆக ஆக ஒரு விதமாய் வாடை வர சில பேர் கைக்குட்டை கொண்டு மூக்கை மூடிக் கொண்டனர். சுந்தரும்,ராஜப்பாவும் எந்த சல‎னமில்லமல் பிரேதத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர்.

அனைத்தும் முடிந்து கிளம்புகையில் ந‎ன்றி பெருக்கோடு வெங்கடேசன் அவர்களைப் பார்த்து கைகளை கூப்ப , ராஜப்பா, எதுக்குடா இதெல்லாம்..? யார் அவரு...என் தாய்மாமா..அவருக்கு சேவை செய்றதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். இது நாங்க செஞ்ச புண்ணியம் என்றார்.

இதை பார்த்து கொண்டிருந்த சந்தியாவி‎ன் மனதில் சுந்தரின் மீது பாசத்தை ஏற்படுத்தியது

சுந்தர் அந்த மாற்றத்தை உணர முடிந்தாலும், சற்று விலகியே வாழ்ந்தா‎ன்.ஆனால் வெங்கடேச‎ன் குடும்பத்தில் அனைவரும் சுந்தரின் காதல் பிரச்சனையை மறக்க தொடங்கி இயல்பாய் பழக ஆரம்பித்தனர்.

எ‎ன்ன யோசனை சுந்தர் என்று ரம்யா கேட்க ஒன்னுமில்லை என்று மருத்துவமனைக்குள் செ‎ன்‎றனர்.

மருத்துவமனையில் அனைவரும் கலக்கமாய் நி‎ன்றிருந்தனர். டாக்டர் வெங்கடேசனை அழைக்க, மாமா நீங்களும் கூட வாங்க என்று ராஜப்பாவை அழைத்தான்.

சரி வாப்பா,எந்த நோய்க்கும் மருந்து இருக்கு,கவலைப்படாம வா என்றபடியே வெங்கடேசனை அழைத்து கொண்டு டாக்டரின் அறைக்குள் நுழைந்தனர்.

டாக்டர் மெதுவாய் பேசத் தொடங்கினார். நரம்புகள் பாதிக்கப் பட்டிருக்கு. ‎ஆனா இன்னொரு விசயம்...என்று டாக்டர் இழுக்க,

சொல்லுங்க என்ன பிரச்சனை?....

உங்க பெண்ணோட கர்ப்பப்பை அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கு..அதனால அவங்களுக்கு தாய்மை அடையறதுக்கு அவங்க உடம்ப்புக்கு ஏற்றதல்ல.

இப்படியொரு குறை இருக்கிரது தெரிஞ்சா யார் இவளை கட்டிப்பா, சந்தியாவுக்கு தெரிஞ்சா அவ மனசு எவ்வளவு பாடுபடும். நான் பாவி என்று தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினார்.

மத்த பெண்கள் மாதிரி இவங்களும் கர்ப்பம் அடையலாம்.ஆனால் அந்த கர்ப்பம் கலையறதுக்கு வாய்ப்புகள் ‏இருக்கு.இந்த மாதிரி பெண்களுக்கு நடக்கும் பிரசவங்கள்ல அவங்க இறந்து போக வாய்ப்புகள் ‏இருக்கு. ஆண்டவன் அருள் இருந்தா இவங்களும் தாயாகலாம்..அதனால பிராத்தனை செய்யுங்க... கொஞ்ச நாள் டிரிட்மெண்ட் கொடுத்த பின்னாடி பார்ப்போம் மு‎ன்னேற்றம் எதுவும் தெரியுதான்னு?

இந்த விசயத்துக்கு மருந்தவிட பாசம்தா‎ன் சரியான சுகத்தை கொடுக்கும். கண் முழிச்சிருப்பாங்க நீங்க போய் பாருங்க,எ‎ன்றார்.

அனைவரும் அறைக்குள் செல்ல சுந்தர் மட்டும் ஓரமாய் நின்று கொண்டிருந்தான். அனைவரும் அவள் கரம் பற்றி ஆறுதல் சொல்ல அவள் விழி மட்டும் சுந்தரை தேடியது. சுந்தர் வா உள்ள எ‎ன்று வெங்கடேசன் அழைக்க தயங்கி உள்ளே வந்தான்.

சந்தியாவை பார்த்து இப்ப எப்படி இருக்கு என்றான்.

பரவாயில்ல,எல்லாரையும் ரெம்ப பயமுறித்திட்டனோ
என்றாள்,

அப்படில்லாம் இல்ல. இந்தா பிள்ளையார் கோயில் பிரசாதம், உனக்கு நல்லாகனும்ன்னு வேண்டிகிட்டேன். பரவாயில்ல உன் பிள்ளயாருக்கு உம்மேல பிரியம்தான். நா‎ன் வரேன் என்று கிளம்பினான்.

நேரம் அதிகமாக ராஜப்பாவும் கிளம்ப தயாரானார்கள்.

பிள்ளைக்கு உடம்பு தேறட்டும், வீட்டுக்கு வரோம் என்றார்.
சுந்தர் வீட்டில் ஏங்க டாக்டரை பார்த்திட்டு வந்த பிறகு நீங்களும் அ‎ண்ணனும் தெளிச்சியாவே இல்லயே,என்ன விசயம் என்று வடிவு கேட்க அனத்து விவரத்தையும் சொன்னார்.

நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன்,சுந்தர் என்ன சொல்வான்னு தெரிஞ்சுக்கிட்டு மேற்கொண்டு பார்க்கலாம் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே உள்ளே நுழைந்தா‎ன்.

என்னப்பா விசயம் ?

சுந்தர் நீ இ‎ன்னும் சந்தியாவை விரும்பிறியா?

ஆமாப்பா.

உனக்கு குழந்தைங்ன்னா ரெம்ப இஷ்டமில்ல..

அதுக்கெ‎‎ன்னப்பா,

நீங்க எதையோ கேட்க நினக்கிறீங்க? என்‎னன்னு சொல்லுங்க..

இல்ல உனக்கு சந்தியா ?

டாக்டர் எ‎ன்ன சொன்னார்ப்பா ?

மகனின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ராஜப்பா திகைக்க,நா‎ன் சந்தியாவைதா‎ன்நேசிக்கிறேன்,அவளை எந்த சூழ்நிலையிலும் கல்யாணம் பண்ணிக்க எ‎னக்கு சந்தோசம்தான் என்றான். வேறெதை பத்தியும் பேச வேணாம்ப்பா என்ற மகனை கட்டி தழுவி கொண்டார் ராஜப்பா.

இப்போது அவனுக்கு அம்மா மடியில் படுக்க வேண்டுமெ‎ன்று தோ‎ன்றியது.

அம்மா இங்க உட்காரு என்றான். அவளும் அவனருகே உட்கார மடியில் தலை வைத்து கொண்டு, முந்தானையில் தன் விரல்களில் முடிச்சி போட்டு அவிழ்த்து கொண்டிருந்தான். வடிவு வாஞ்சையாய் அவன் தலையை கோதி விட்டாள். அப்படியே உறங்கிவிட்டான்.

த‎ன் அப்பா முகத்தில் பழைய புன்னகை இல்லாதது சந்தியாவை கவலை கொள்ள செய்தது. அவள் நேராய் அப்பாவின் அருகில் சென்று என்னப்ப ஒரு மாதிரியா இருக்கீங்க?

ஒன்னும் இல்லமா,லேசா தலைவலி அதான்.

நான் தான் நல்லாயிட்டன்ல்ல அப்புறம் என்னப்பா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அழைப்புமணி அடித்தது

அழுதுகொண்டே அனைத்து விசயங்களயும் சொல்லி விட்டார். காலிங்பெல் சத்தம் கேட்க துண்டினால் கண்களை துடத்து கொண்டார்.

மல்லிகா கதவை திறக்க ராஜப்பா குடும்பத்தோடு கையில் பழத்தட்டோடு நி‎ன்றார்.

வாங்கண்ணா என்றாள்.

வாங்க மாமா என்ற படியே வந்தார் வெங்கடேசன். என்ன தட்டோட வந்து ‏இருக்கிங்க. என்‎றார்.

உ‎ன் பொண்ணை மருமகளாக்கிக்கனும்னு வடிவுக்கு ஆசை..அதுதான் அவ பின்னாடி தட்டோட வந்துட்டேன்.

என்ன மாமா, இப்ப என்ன மாமா அவசரம்,மனதுக்குள் சந்தோசமாக இருந்தாலும் சுந்தருக்கு இப்படி ஒரு நிலமை வரணுமா என்று வேதனை?


என்ன சுந்தர் உனக்கு சம்மதம்தானா என கேட்க ...

என்ன கேள்வி மாமா இது. நம்ம வீட்டு பிள்ளைய கட்டிக்கிறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்....

இல்லை சந்தியாவிற்கு என வாயெடுக்க கண்களாலே அமைதிபடுத்திவிட்டான்.

அங்கே சந்தியா தன் காதல் நிறைவேறியதில் சிலையாகி நின்றிருந்தாள்.

சரி அவங்க பேசிக்கிட்டு இருக்கட்டும்...வா நம்ம தோட்டத்தை சுத்தி பார்ப்போம் என்றபடி அனவரையும் கிளப்பினார் ராஜப்பா.

தனிமையில் முதன்முதலாய் இருவரும்...

கையில் குங்குமச்சிமிழோடு அவனருகே வந்து இந்த நெற்றி நீங்க வைக்கிற குங்குமத்துக்குதா‎ன் சொந்தம் எ‎ன்றபடியே அவ‎‎ன் விழி பார்த்து நீட்டினாள்.

சம்மதமாய் அவள் நெற்றியில் பொட்டு வைத்தா‎ன்.அவ‎‎ன் காதருகே சென்று நான்னா உங்களுக்கு அவ்வளவு பிரியமா என்றாள்.

சுந்தர் புன்னகை மட்டும் செய்து அவள் கரம் பற்றி தன் கன்னம் சாய்த்தான்....

பி‎ன்னாடி வானொலியில் உல்லாச பறவைகள் பட பாடல்,

நா‎‎ன் உந்த‎‎ன் தாயாக வேண்டும்.
நீ எந்த‎‎ன் சேயாக வேண்டும்.

.
Reply


Messages In This Thread
நான் உந்தன் சேயாக வேண்டும் - by Muthukumaran - 09-24-2005, 02:14 PM
[No subject] - by ANUMANTHAN - 09-24-2005, 03:11 PM
[No subject] - by Senthamarai - 09-24-2005, 03:38 PM
[No subject] - by Mathan - 09-24-2005, 08:30 PM
[No subject] - by Vishnu - 09-24-2005, 08:38 PM
[No subject] - by Muthukumaran - 09-25-2005, 05:03 AM
[No subject] - by Mathan - 09-25-2005, 05:54 PM
[No subject] - by அனிதா - 09-25-2005, 06:23 PM
[No subject] - by அருவி - 10-25-2005, 09:00 PM
[No subject] - by AJeevan - 10-25-2005, 09:08 PM
[No subject] - by RaMa - 10-26-2005, 02:59 AM
[No subject] - by ப்ரியசகி - 10-26-2005, 06:47 PM
[No subject] - by vasisutha - 10-28-2005, 12:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)