09-23-2005, 11:19 AM
stalin Wrote:காதல் என்று மீள் பதிவினால் ஏற்படும் சுகவேதனையை மீண்டும் மீணடும் அலசி ... காதலை தெய்வீகமாகவும் புனிதமாக இருக்காதா என்ற ஏக்கத்தில் வார்த்தைகளை தேடுகிறார்..கட்டுரையாளர்..அவ்வளவு தான்
நான் காதலிக்காததால் காதல் தோல்வியின் பாதிப்பை முழுமையாக விளங்காவிட்டாலும் மனிதம், மனித உணர்வுகள் ஆகியவற்றை விளங்கி கொண்ட அடிப்படையில் சிறிதளவாகவேனும் புரிந்து கொள்ள முடியும். இம்முறை உயர்தர பரீட்சை வெளியான பிறகான ஓர் சம்பவம் எனது உள்ளத்தை நிஜமாகவே பாதித்து விட்டன என்றே கூறவேண்டும். அதனுடைய தாக்கம் தான் இக்கட்டுரை என்பதை ஒப்புக் கொள்ளவிருக்கிறது.
கட்டுரையாளரின் மேலுள்ள கருத்துக்கள் அவரது வயதையும்,அந்த வயதில் ஏற்படும் குழப்பங்களையும் பிரதி பலிக்குறது.இன்னும் அனுபவம் வேணும் காதலைப் பற்றி முழுமயாப் புரிந்துகொள்ள.

