09-23-2005, 08:59 AM
எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. காதல் அல்ல infatuation. ஒன்றல்ல ஏராளம், அந்த சின்ன வயதில் அது என்னவென்று புரிவதில்லை, ஆனால் நன்றாக இருக்கும் மனதுக்கு, இவ்வளவுக்கும் வாயால்கூட பேசி இருக்கமாட்டோம், காற்றில் பறப்பது போன்று நீரில் மிதப்பது போன்று ஆனந்தமாக இருக்கும், கற்பனைகள் கொடிகட்டிப்பறக்கும், படிப்பதற்க்கு இது பெரும் இடையூறாய் அமைந்திருக்கும் என்பது உண்மை, அதனால்தான் கூறுகிறார்கள் அந்த வயதில் எந்த பெரிய முடிவுகளையும் எடுக்காதே என்று. இப்போது நினைத்துப்பார்தாலும் அன்நிகழ்வுகள் மனதுக்கு இதமாக இருக்கிறது, எதையோ இழந்து விட்டோமோ என்ற தவிப்பும் இருக்கிறது, அது சரியா? தவறா? என இப்பொதும் எதிர்வு கூற முடியவில்லை, "இழந்ததை நினைத்து வருந்துவதை விட இருப்பதை வைத்து மகிழ்வாக வாழலாம்",
ஒன்றை இழந்தால்தான் ஒன்றை அடைய முடியும் என்பது உலகநியதி, நான்மட்டும் விதிவிலக்கா?
ஒன்றை இழந்தால்தான் ஒன்றை அடைய முடியும் என்பது உலகநியதி, நான்மட்டும் விதிவிலக்கா?
.
.
.

