Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முஸ்லிம்
#14
வசதியான நேரம் பார்த்துத் தான் உண்மைகள் சொல்லவேண்டும். அப்போது தான் செவிடுக் காதுகளுக்கும் அது போய்ச் சேரும்;. தமிழன் அட்டூழியம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டானே ஒழிய அவனாக அட்டூழியம் செய்ய முயற்சிக்கக் கூட இல்லை. அகிம்சா வாதம் பேசி வேட்டிகிழிய அடிவாங்கியது தான் அன்றைய யதார்த்தம், உண்மை. ஆகவே எங்கே எப்படி பேச வேண்டுமோ அங்கே அப்படித்ததான் பேச வேண்டும். கசாப்புக்கடைக்கரனிடம் போய் தர்மத்தையும் தாத்தாவிட் போய் இன மண் மானத்தையும் பேச முடியுமோ? குட்டக் குட்டக் குனிந்தோம். குனியக் குனிய உதை வாங்கினோம். ஒரு மானமுள்ள மனிதனால் இன்று தலை நிமிர்ந்திருக்கின்றோம். அடிக்கு அடி கொடுத்ததனாலும், அவலத்திற்கு அவலத்தைக் கொடுத்ததனாலும் இன்று தலை நிமிர்ந்திருக்கின்றோம். ஆகவே முன்னால் பாருங்கள். பின்னால் நடந்தவைகள் கெட்ட கனவாக மாறட்டும்.(நாம் குட்டுப்பட்டது கூட) நல்லவைகள் நடக்கும் என்ற நம்பிக்கையி;ல்.

தாத்தா இவர்களின் மனிதாபிமானம் எல்லாம்; யுத்தம் நடக்கும் போது, மனித வாழ்வே சீரழிந்து கிடக்கும் போது எங்கே போனது? ஆணவ அரசினால் பொருளாதாரத் தடை விதித்து பட்டினிச்சாவை நோக்கி ஒரு இனத்தையே தள்ளியபோது, ஆயுதங்கள் கடனுக்கும் உதவிக்கும் கொடுத்து ஒரு இனத்தை அழிக்க துணை போன போது எங்கே இந்த மனிதாபிமானம்? தமது வயிறு வளர்க்க ஆயுதங்கள் விற்று நாடுகளைச் சுரண்டித் தின்பவர்களின் மனிதாபிமானம் பற்றி பேச வெட்கமாயில்லை. இன்றும் எமது கனிவளங்கைளைக் கொள்ளையடித்துக் கொண்டு போகவும் மனித வளங்களைக் சுரண்டிக் கொண்டு போகவும் தான் இந்த கித்தாப்பு எல்லாம். (தாத்தா முன்னர் புலம் பெயர்ந்தவர்களைப் போட்டு குழப்பியது போல குழப்பாமல் கவனமாகப் படியுங்கள். ஒரு சில நாடுகளை மட்டும் தான் நான் குறிப்பாக எழுதுகின்றேன். எதையும் எதிர்பார்க்கமல் உலக அமைதிக்காக பாடுபடும் நாடுகளையும் வம்புக்கிழுக்காதீhகள்) மனிதாபிமானத்தையே வியாபாரப் பொருளாக்கித் திரியும் இவர்கள் செயல் அந்த சொல்லுக்கே இழுக்காகும். அப்படி அவர்கள் ஏதும் செய்தாலும் தமது அநியாயங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் பிராயசித்தம் தேடத் தானே ஒழிய பரிதாபப் பட்டோ மனிதாபிமானப் பட்டோ அல்ல. இவர்களும், நீ அழிக்க உதவினாய், இனி ஆக்கவும் உதவி செய் என்ற மனப்பான்மையிலேயே பெறுகின்றனர். சுரண்டித தின்பதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசமுண்டு. சரி நீங்கள் எதற்கு இவர்களுக்காய் அடிக்கடி ஒப்பாரி வைக்கின்றீர்கள்? சுரண்டியதில் ஏதும் பங்கு….? சார்பாக பேசுவதால் பிஸ்கட் துண்டுகள் ஏதும்.....?!

அன்புடன்
சீலன்
seelan
Reply


Messages In This Thread
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 06:42 PM
[No subject] - by yarl - 11-03-2003, 07:53 PM
[No subject] - by P.S.Seelan - 11-04-2003, 12:57 PM
[No subject] - by kuruvikal - 11-04-2003, 06:21 PM
[No subject] - by Mathivathanan - 11-04-2003, 06:52 PM
[No subject] - by aathipan - 11-05-2003, 06:17 PM
[No subject] - by P.S.Seelan - 11-06-2003, 12:52 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 01:01 PM
[No subject] - by P.S.Seelan - 11-07-2003, 12:53 PM
[No subject] - by Mathivathanan - 11-07-2003, 07:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-08-2003, 12:44 PM
[No subject] - by Mathivathanan - 11-08-2003, 01:12 PM
[No subject] - by P.S.Seelan - 11-10-2003, 12:34 PM
[No subject] - by Mathivathanan - 11-10-2003, 05:00 PM
[No subject] - by Mathivathanan - 11-10-2003, 05:17 PM
[No subject] - by P.S.Seelan - 11-11-2003, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 11-11-2003, 06:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-12-2003, 12:46 PM
[No subject] - by Mathivathanan - 11-12-2003, 01:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-13-2003, 12:44 PM
[No subject] - by sethu - 12-09-2003, 09:51 AM
[No subject] - by sethu - 12-09-2003, 09:52 AM
[No subject] - by sethu - 12-09-2003, 09:52 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:15 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:17 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)