11-10-2003, 11:43 AM
aathipan Wrote:<img src='http://www.terravista.pt/nazare/2643/ka22.jpg' border='0' alt='user posted image'>
ஒரு நாள் நீ சைக்கிளில் வந்துகொண்டிருந்தாய்
காற்றில் உன் தொப்பி பறந்து கீழே விழ்ந்துவிட்டது
நான் ஏதோ பொது சேவகன் போல ஓடிவந்து எடுத்துக்கொடுத்தேன்
நீ என் பெயர் சொல்லி நன்றி சொன்னாய்.......
எத்தனை காலம் நான் ஏங்கியிருக்கிறேன்
நீ என் பெயர் சொல்லிக்கேட்க...
என் பெயரே அன்று தான் பேறுபெற்றது....
உன் ஏக்கத்தை தீர்ப்பதற்கே
அப்படி
நாடகம் ஆடினேன்
நீ குதுாகலத்தில்
திளைத்துப் போனாய்
ஆனால்
நானோ - என்
நண்பர்கள் வைத்த
போட்டியில்
வெற்றி பெற்றேன்
அன்று
வழிந்த
உன் முகத்தை
இன்றும்
என்னால்
மறக்க முடியவில்லை.

