11-10-2003, 11:29 AM
புலம் பெயர் வானொலிகள் அனைத்திலுமம் பிரச்சனைதான். இதற்கு முதன்மை காரணம் எது? மண்டையை போட்டு குழப்புவதை விடுத்துஇ கடந்த 5 ஆண்டுகளை கெஞ்சம் திரும்பி பாரப்போம். முகமே தெரியாது இருந்த பல அறிவிப்பாளர்களுடன் தாயகத்தில் பிரபலமான அறிவிப்பாளர்கள் சிலருடன் வானொலிகள் ஆரம்பிக்கப்பட்டன. வானொலிகள் ஆரம்பித்ததும் பிரபல்யமான அறிவிப்பாளர்களின் அனுபவங்களை கற்றுக்கொண்ட புதிய அறிவிப்பாளர்கள் வானொலியல் தமது பேச்சுவன்மையை பவித்து மக்கள் மத்தியில் கொஞ்சம் செல்வாக்கைப் பெற்றனர். இது அவர்களின் மனதில் ஒரு திரில்லை ஏற்படுத்த தாம் ஏதே பெரிய கலைஞர்கள் என்ற எண்உத்தை தம்முள் வழர்க்க தொடங்குவர். அப்பாவி பொதுமக்களும் இவர்கள் ஏதே திமை மிக்கவர்கள் தான் என்று கொஞ்சம் பப்பாவில் ஏத்தி விடுவார்கள். கொஞசம் நாள் சென்றதும் இந்த அறிவிப்பாளர்கள் தம்மை விட்டால் ஒரு அறிவாளி இல்லை என்ற அளவிற்கு பேச வெளிக்கிடுவார்கள். மக்களிற்கு அறிவுரையும் செல்வார்கள். இதில் ஒரு சிலரை தவிர எந்த வித பொது அறிவும் இல்லாத இந்த அறிவிப்பாளர்கள் ஒரு நல்ல வாசிப்பையோ அல்லது ஒரு அறிவுத் தேடலையோ கொண்டிருக்க மாட்டார்கள். அடுத்தவனை அப்பயே காப்பியடித்து தம்மை பெரியவர்களாக காட்டிக் கொள்வார்கள். மமதை கொஞசம் தலைக் கேறியவுடன் பணிப்பாளர்களையும்இ பொறுப்பாளர்கiயும் பிளக்மெயில் பண்ணுவார்கள். பாவப்பட்ட பணிப்பாளர்கள் சிலர் தலையில் அடித்துக்கொள்ள சிலர் இவர்களை து}க்கியெறிந்து விடுவர்கள். பிறகென்ன அறிவிப்பாளர் தான் ஒரு வானொலி தனக்கொரு கூட்டம் எண்டு இன்னெண்டை துடங்குவார். இது நாம் கண் கண்ட வரலாறு. அண்மையில் ஐபீசி வானொலிஇ ரீபீசி வானொலிஇ ஈரீபீசி வானொலி எல்லாவற்றிலும் நடந்த பிரச்சனைக்கு மூல காரணம் இது தான். தனிப்பட்ட முறையில் நான் ஒருவரையும் குற்றம் சாட்ட முனையவில்லை. அனால் கொஞ்சம் இந்த வானொலிகளி;ன் வரலாற்றை திரும்பி பார்த்தால் இது நன்கே புரியும். நல்லா நடந்த வானொலிகள் கூட சில சுய நல அறிவிப்பாளர்கள் தம்மை முன்னிலைப் படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக வானொலி அறிவிப்பாளர்கள் இடையில் பிரச்சனையை உண்டு பண்ணியுள்ளர்கள். இவர்கள் இனம் கண்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவர்களின் நன்றாக பேசுவார்கள் எழுதுவார்கள் அனால் மனத்தில் ஒரு ரூட் போட்டு வைத்திருப்பார்கள். அந்த ரூட் இப்ப பல வானொலிகளை பதம் பார்த்துள்ளது. வானொலிலை மட்டுமல்ல இந்த வானொலிகள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கும் ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை. ஊடகத்தின் தேவை பற்றியோ அல்லது ஊடகத்தின் அடிப்படை பற்றியோ அறிவு ஏதும் இல்லாது வெயும் குரல் வளத்தையும் பேசும் வல்லமையை மட்டும் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த அறிவிப்பாளர்கள்இ கூட்டு முயற்சிஇ ஊடக ஜனநாயகம்இ பற்றிய முழுமையான அறிவை தன்னகத்தே வழர்க'கும் வரை இந்த வானொலிகள் அனைத்தும் நாறிக்கொண்டே இருக்கும். ஒரு அறிவிப்பாளன் தான் மக்களிற்கு ஒரு சேவை செய்யும் ஒரு பொது நல விரும்பி என்பதை மனதில் நிலை நிறுத்தி மக்களை மதித்து அவர் தம் கருத்துக்கு மதிப்பளிக்க என்று பழகிகொள்கிறானே அன்று தான் இந்த தமிழ் வானொலிக்கு விடிவு!

