Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளுடன் சந்திரிகாவே பேச்சு நடத்தட்டும்: ரணில்
#1
நவம்பர் 10, 2003
thatstamil.com

விடுதலை புலிகளுடன் சந்திரிகாவே பேச்சு நடத்தட்டும்: ரணில்

கொழும்பு:

விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை அதிபர் சந்திரிகாவே நடத்தட்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.


இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதர் கெபரி லூன்ஸ்டட் , நார்வே நாட்டுத் தூதர் ஹன்ஸ் பராட்கர் ஆகியோரைச் சந்தித்து, தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்துப் பேசியுள்ளார் ரணில்.

அப்போது அவர்களிடம், விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ராணுவத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அது இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறார்.

ராணுவத் துறை தற்போது சந்திரிகாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் , அவரே பேச்சுவார்த்தையை நடத்தட்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இது பற்றி பிரதமர் வாஜ்பாயிடமும் ரணில் பேசியிருக்கிறார். இந்நிலையில் நார்வே தூதுக் குழு இன்று இலங்கை வருகிறது.

இலங்கையில் தேசிய அரசு அமைக்கலாம் என்ற சந்திரிகாவின் யோசனையை ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
Reply


Messages In This Thread
புலிகளுடன் சந்திரிகா - by yarl - 11-10-2003, 08:00 AM
[No subject] - by தணிக்கை - 11-12-2003, 05:30 PM
[No subject] - by AJeevan - 11-13-2003, 11:18 AM
[No subject] - by AJeevan - 11-14-2003, 10:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)