Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அடுத்த காதலி
#1
எல்லாரும் கதை கவிதையெண்டு எழுதி தள்ளினம் நானும் ஒரு கதை எழுதுவமெண்டு நினைச்சு இதை எழுதிறன் படிச்சிட்டு அடிக்க வராதையுங்கோ

<span style='font-size:25pt;line-height:100%'>அடுத்த காதலி</span>
நள்ளிரவு ஒரு மணி மெதுவாக கண்ணை விழித்து பார்த்தான் அவன் மனைவி நன்றாக ஆழ்ந்த நித்திரையிலிருந்தாள்.
மெதுவாக எழுந்து முடிந்தளவுக்கு சத்தம் வராமல் மெது மெதுவாக படுக்கையறையை விட்டு வெளியேறினான்.ஆனாலும் அவனுக்கு ஒரு சந்தேகம் மனைவி உண்மையாகவே நித்திரைதானா சிலநேரம் திடீரெண்டு விழித்து அவன் செய்யபோகும் காரியம் கையும் களவுமாக பிடிபட்டால் அவ்வளவுதான்.

வீடே யுத்தகளமாகி விடும். எதற்கும் மீண்டும் ஒருமுறை அவள் நித்திரை தானா என்பதை உறுதி செய்து கொள்ள மெதுவாக இருமுவது போல ஒரு தடைவை இருமிப்பாத்தான்.அவள் அசையவில்லை.மெதுவாக அறையை விட்டு வெளியேறி அறை கதவை மெதுவாக சாத்திவிட்டு இருட்டில் மிக அவதானமாக அடுத்த அறைக்குள் நுளைந்தான்.

மின் விளக்கை கூட போடாமல் மெதுவாக அவளருகே சென்று போர்த்தியிருந்த போர்வையை விலக்கினான் . அவனது இதய துடிப்பு அதிகரித்து கொண்டே பொனது காரணம் நேற்றும் இப்படித்தான் வந்து தொட்ட போது அவனது மனைவி கண்டுவிட்டாள் இனிமேல் இரவில் இந்த அறைக்குள் நுளைந்தால் பெரிய பிரச்சனையே வரும்
இனியும் பொறுக்க மாட்டன் விவாக ரத்துதான் என்று கத்த தொடங்கி விட்டாள்.

பிறகு அவளை சமாதானப்படுத்தி இனி இரவில் இந்த அறைக்குள் நுளைய மாட்டேன் என்று சத்தியமெல்லாம் பண்ணித்தான் ஒருமாதிரி சமாளித்தது. ஆனாலும் இன்றும் மனம் கேட்கவில்லை ஒருநாளைக்கு ஒருமுறையேனும் அவளை என்னால் தொடமுடியாமல் இருக்கமுடியாது நடப்பது நடக்கட்டும் எண்று எண்ணியவாறு மெதுவாக் அவள் மீது அவனது விரல்கள் படர அவள் விழித்து கொண்டாள் அவனுக்குள் ஒரு இனம்புரியாத ஆனந்தம் பரவிக்கொண்டது.

காதல் இதுதான் அவன் உள்ளே நுளைவதற்கான(யாழ்களத்தில் உள்ளே நுளைவதற்கான )கடவுச்சொல்.என்றாலும் அவனுக்கு மனதில் பயமாக தான் இருந்தது மனைவி வந்தால் சத்தம் போடுவாள் அவள் பல முறை சண்டை பிடித்திருக்கிறாள்; விடிய விடிய கணணியிலை தட்டி கொண்டிருக்காதையுங்கோ எண்டு. ஆனாலும் என்ன செய்ய கணணி அவனது அடுத்த காதலியாகி விட்டது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


இப்பிடி கன பேரின்ரை வீட்டிலை உண்மையா நடக்கிது எனக்கும்தான்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Messages In This Thread
அடுத்த காதலி - by sathiri - 09-22-2005, 04:18 PM
[No subject] - by shanmuhi - 09-22-2005, 04:21 PM
[No subject] - by RaMa - 09-22-2005, 04:23 PM
[No subject] - by வெண்ணிலா - 09-22-2005, 04:25 PM
[No subject] - by inthirajith - 09-22-2005, 04:29 PM
[No subject] - by Birundan - 09-22-2005, 04:30 PM
[No subject] - by வெண்ணிலா - 09-22-2005, 04:51 PM
[No subject] - by அனிதா - 09-22-2005, 05:28 PM
[No subject] - by Rasikai - 09-22-2005, 05:37 PM
[No subject] - by Vishnu - 09-22-2005, 05:42 PM
[No subject] - by KULAKADDAN - 09-22-2005, 06:28 PM
[No subject] - by ANUMANTHAN - 09-22-2005, 06:45 PM
[No subject] - by கீதா - 09-22-2005, 06:46 PM
[No subject] - by selvam - 09-22-2005, 07:30 PM
[No subject] - by வெண்ணிலா - 09-23-2005, 01:35 AM
[No subject] - by sooriyamuhi - 09-23-2005, 02:01 AM
[No subject] - by SUNDHAL - 09-23-2005, 02:14 AM
[No subject] - by kuruvikal - 09-23-2005, 03:49 AM
[No subject] - by sathiri - 09-23-2005, 06:21 AM
[No subject] - by MUGATHTHAR - 09-23-2005, 01:36 PM
[No subject] - by Jenany - 09-23-2005, 07:32 PM
[No subject] - by sabi - 09-23-2005, 08:48 PM
[No subject] - by sathiri - 09-23-2005, 10:20 PM
[No subject] - by sinnappu - 09-23-2005, 10:27 PM
[No subject] - by sinnappu - 09-23-2005, 10:30 PM
[No subject] - by kurukaalapoovan - 09-24-2005, 04:20 AM
[No subject] - by வியாசன் - 09-24-2005, 07:41 AM
[No subject] - by Mathan - 09-26-2005, 07:54 PM
[No subject] - by தூயா - 10-16-2005, 10:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)