09-22-2005, 02:45 PM
<b>தியாகத்தின் சிகரம் </b>
ஊரெழு தந்த உன்னத மன்னன் அவன்
நாசம் செய்யும் படைகளுக்கு எதிராய்
ஆணவத்தோடு பகைவரை வென்றிட
நம்தமிழீழ மக்களின் தேவைகளை முன்வைத்தே
பன்னிரு நாட்கள் பட்டினி வேள்வியில்
உடல் தளர்ந்து உயிர் கொடுத்த தியாகதீபமே
மண்ணினை மீட்கும் புனிதப் போரில் சமாதானக்
கதவைத்திறந்து தமிழீழத்திற்கு வித்திட்ட மாவீரனே
எங்கள் நெஞ்சமதில் குடிகொண்ட தியாகப்பெருமகனே
உயிரினும் மேலாய் உரிமையே என்றே
சுயமாய் தமிழினம் என்றும் ஆளும் காலம் வேண்டி
அகிம்சை வழி நின்று தன்னுயிரை ஈந்து
அணையா விளக்காய் அவனியில் சுடராய் சோதியாய்
இறைவனடி சேர்ந்த தியாகத்தின் சிகரத்தை
என்றென்றும் போற்றுவோம்