09-22-2005, 04:42 AM
கொழும்பு, புறக்கோட்டை சிறீ கதிரேசன் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் ஒருவரின் சடலம், துர்நாற்றம் வீசிய நிலையில் நேற்று புதன்கிழமை மாலை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை அக்கரைப்பற்றைச் சேர்ந்த கந்தசாமி விவேகானந்தராஜா (அகவை 23) என்பரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை காவல்துறை நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த ஓவிட்டிகம தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக முடப்பட்டிருந்த அறையை திறந்து பார்த்த போது அவரின் சடலம் துர்நாற்றம் வீசிய நிலையில் காணப்பட்டது. இம்மரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் அந்த மர்மம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.