09-22-2005, 04:00 AM
preethi Wrote:நான் சொல்வதெல்லாம் கமலகாசனை உதாரணத்துக்குக் கூடப் பாவிக்கத் தேவையில்லை. அவரை விட தங்களின் உடல், பொருள், ஆவி யாவற்றையும் மிகவும் இக்கட்டான கால கட்டத்தில், பணமும் அதிகாரமும் மிக்க பார்ப்பான்களை எதிர்த்துத் தமிழ் இசை வளர்த்த தமிழர்கள் எத்தனயோ பேரிருக்க சும்மா சினிமாவில் வாயசைத்த கமலகாசனை உதாரணத்துக்குக் கூடக் காட்டுவது எனக்கு அபத்தமாக இருக்கிறது, அவ்ர்களை இழிவு செய்வது போன்றது என்பது தான்.
கமலஹசன் உதாரணமாக காட்டப்பட்டது, நீர் கேட்ட தன்னை தமிழன் என்று சொன்ன பிராமண பரம்பரையை சேர்ந்த ஒருவனுக்காகத்தான். கமலஹசனையும், பாரதியையும், கிருஷ்ண ஐயரையும் இதற்கு நான் உதாரணமாக காட்டியிருந்தேன். நீர் இங்கு குறிப்பிடுபவர்கள் அதற்கு எப்படி உதாரணமாவார்கள்?
preethi Wrote:திரு Jude அவர்களின் கருத்துப்படி பார்த்தால் புலம்பெயர்ந்த இரண்டாம் தலமுறைத் தமிழர்களில் 90% வீதமானவர்கள் தமிழர்களல்ல. இவரின் கருத்துப் படி நான் மட்டுமல்ல தமிழில் ஒரு வரி கூட எழுதத் தெரியாத என்னுடைய தம்பியும் தமிழனல்ல.
தமிழ் ஒரு மொழி. தமிழ் பேசுபவன் தமிழன். தமிழ் மொழியே தெரியாதவன் தமிழன் அல்ல. தமிழ் பேசும் மக்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்து, ஹரப்பா, மொகஞ்சதாரோவில் குடியேறிய மக்களின் வழிவந்த ஆபிரிக்க மக்கள். ஆக நீர் பிறப்பால் உண்மையில் ஆபிரிக்கர். பேசும் மொழியை கொண்டு உம்மை ஒரு குழுவுக்குள் வகுப்பது உமக்கு பிடிக்கவில்லை, பிறப்பால் நீர் யார் என்றால், நீர் பிறப்பால் ஆபிரிக்க அடியிலிருந்து வந்த ஆபிரிக்கர். உமது தம்பியும் கூடத்தான்.

