Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோயிஞ்சாமியும் சில கொஸ்டின்களும்
#1
கோயிஞ்சாமி "சும்மா போட்டுத்தான் பாப்போமே'ன்னு ஒரு போட்டித் தேர்வுக்கு அப்ளை பண்ணினாரு. தேர்வுக்கு நாலு நாளைக்கு முன்னாடி ஹாலு டிக்கெட்டும் குஜாலா வந்து சேர்ந்துச்சு. ஒரு மண்ணும் படிக்கல கோயிஞ்சாமி. பரிட்சைக்கு முந்தின நாள் இரவு படிக்காத துக்கத்துல, தூக்கம் வராம ரெண்டு மாத்திரையைப் போட்டுத் தூங்கினாரு கோயிஞ்சாமி. அப்ப கனவுல "கலகல'ன்னு ஒரு கொஸ்டின் பேப்பர் வந்துச்சு. அதப்பார்த்து வெலவெலத்துப் போயிட்டாரு கோயிஞ்சாமி. அதான்யா இது!


1. உங்கள் பெயர் கோயிஞ்சாமியா?

அ) ஆமா ஆ) ஒத்துக்கறேன் இ) சரி


2. நியூட்டனின் மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தவர் யார்?

அ) கொலம்பஸ் ஆ) கோயிஞ்சாமி இ) குட்டிச்சாமியார்


3. இந்தியாவின் கேப்பிடல் (Capital) எது?

அ) india ஆ) INDIA இ) INDia


4. த.பி.பா (தயவுசெய்து பின்னால் பார்க்கவும்) என்பதன் விரிவாக்கம் என்ன?

அ) தயவுசெய்யாமல் பின்னால் பார்க்கவும் ஆ) தயவுசெய்து பிராண்டிப் பார்க்கவும் இ) த.பி.பா


5. 1, 0, 1, 1, 1, 1, 1, 1, ? -இந்த வரிசையில் "?' இடத்தில் என்ன எண் வரும்?

அ) ? ஆ) ? இ) ?


6. சூரியன் இரவு நேரத்தில் எங்கே போய் தங்குகிறது?

அ) இருட்டான இடத்தில் ஆ) தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இ) அறிவாலயத்தில்


7. இந்தக் கேள்வியின் எண் என்ன?

அ) 8 ஆ) 10 இ) 15


8. Aயும் Bயும் அக்கா தங்கச்சி. Bயும் Cயும் ஒண்ணுவிட்ட தங்கச்சி. Cயும் Dயும் உறவுமுறை. Dக்கு A அத்தை. E க்கு D சகலை. C க்கு E சம்பந்தி முறை. B யை D கல்யாணம் பண்ணினா B க்கு D என்ன வேணும்?

அ) தூரத்துச் சொந்தம் ஆ) பக்கத்துவீட்டுக்காரன் இ) பங்காளி


9. ஒரு வேலையை 12 பேர் 8 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 16 பேர் 6 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 20 பேர் 4 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். அப்படின்னா, அந்த வேலையை யாருமே செய்யலைன்னா அந்த வேலை எப்ப முடியும்?

அ) நேத்திக்கி ஆ) நாளைக்கி இ) அமாவாசை அன்னிக்கி


10. இந்த கேள்விக்கு நீங்க என்ன பதில் அளிக்க விரும்புறீங்க?

அ) ஆ) ஹிஹி இ) டுர்ர்ர்...


11. ஐஸ் கட்டி தயாரிக்க என்ன மூலப்பொருள் தேவை?

அ) பெரிய ஐஸ் கட்டி ஆ) மூளை இ) அடுப்பு


12. 3 + 3 = ?

அ) ஆறு ஆ) 6 இ) யஐ


13. சென்னைல இருந்து எக்ஸ்பிரஸ் அ மணிக்கு 300 கி.மீ வேகத்துல தூத்துக்குடிக்கு காலைல 7 மணிக்கு கிளம்புது. (மொத்த தூரம் 650 கி.மீ) அதேநேரத்துல எக்ஸ்பிரஸ் ஆ மணிக்கு 250 கி.மீ வேகத்துல டெல்லியில இருந்து மும்பைக்கு கிளம்புது. (மொத்த தூரம் குத்துமதிப்பா 77777777 செ.மீ. எக்ஸ்பிரஸ் அயும் ஆயும் எங்க, எந்த நேரம் சந்திக்கும்?

அ) தண்டவாளத்துல, மத்தியான நேரத்துல

ஆ) லாலு வீட்டுக்குப் பின்னாடி சாயங்காலம்

இ) சத்யம் தியேட்டர்ல, ரெண்டாவது ஆட்டத்துக்கு!


14. "எக்ஸ்' என்பது ஒரு இரட்டை எண். அதை "ஒய்' ஆல் பெருக்கினால் 12 வரும். 3320 என்பது "எக்ஸின் ஐந்தரை மடங்கு. "ஒய்' மற்றும் "இஸட்'டின் இரு மடங்குக் கூட்டுத்தொகை "எக்ஸின்' மூன்று மடங்கு பெருக்குத்தொகையின் நாலில் ஒரு பங்கு. "எக்ஸ், ஒய், இஸட்' -இவற்றின் மதிப்புகளைக் கண்டறிந்து, இரண்டால் பெருக்கி, 7-ஐக் கழித்தால் இறுதியில் என்ன வரும்?

அ) எரிச்சல் ஆ) தலைவலி இ) மனநோய்


15. கோழியின் தயாரிப்பான பின்வரும் பொருள்களில் எது முதலில் வந்தது?

அ) ஆம்லெட் ஆ) முட்டை புரோட்டா இ) ஆஃப் பாயில்


16. முதல் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடையில் எத்தனை உலகப் போர்கள் நடந்தது?

அ) 33 ஆ) 1/2 இ) 0.0147


17. கீழ்க்கண்டவற்றில் "உயிர்' எழுத்துகள் எவை?

அ) கடசதபற ஆ) ஞஙணநமன இ) உயிர்


18. நீங்கள் இறுதிக் கேள்வியை அடைந்துவிட்டீர்களா?

அ) தெரியவில்லை ஆ) புரியவில்லை இ) அறியவில்லை
ThanksBig Grininamani
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
கோயிஞ்சாமியும் சில கொஸ்டின்களும் - by SUNDHAL - 09-21-2005, 12:57 PM
[No subject] - by Senthamarai - 09-21-2005, 01:18 PM
[No subject] - by Birundan - 09-21-2005, 01:52 PM
[No subject] - by sankeeth - 09-21-2005, 02:36 PM
[No subject] - by RaMa - 09-21-2005, 03:44 PM
[No subject] - by SUNDHAL - 09-22-2005, 03:13 AM
[No subject] - by ANUMANTHAN - 09-22-2005, 04:03 AM
[No subject] - by SUNDHAL - 09-22-2005, 04:13 AM
[No subject] - by வெண்ணிலா - 09-22-2005, 08:40 AM
[No subject] - by Birundan - 09-22-2005, 08:53 AM
[No subject] - by Thala - 09-22-2005, 08:58 AM
[No subject] - by MUGATHTHAR - 09-22-2005, 10:08 AM
[No subject] - by Birundan - 09-22-2005, 10:48 AM
[No subject] - by sri - 09-22-2005, 10:56 AM
[No subject] - by sri - 09-22-2005, 11:06 AM
[No subject] - by vimalan - 09-22-2005, 11:23 AM
[No subject] - by Birundan - 09-22-2005, 11:26 AM
[No subject] - by SUNDHAL - 09-22-2005, 11:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)