11-09-2003, 02:14 AM
இல்லை நளா.. சில திருமணமாகாத தமிழ் இளைஞர்களுடன் (ஆண் பெண் இருபாலாரும்) உரையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களில் பெரும்பாலானவர்களின் எண்ணம் பதிவுத் திருமணம் அவசியமில்லை என்பதாகும். அது ஏற்படுத்திய தாக்கத்தில் யாழ் அங்கத்தினரின் கருத்தை அறியவே இந்தத் தலைப்பு. இங்கே நான் எழுப்பும் கேள்விகளும் அவர்கள் எழுப்பிய வினாக்களே.. எனது சுய சிந்தையில் எழுந்த கேள்விகள் அல்ல.. ஆகவே.. நளா உட்பட யாபேரும் இதைப் பார்வையிடும் இளைஞர்களுக்கு தமது அபிப்பிராயங்களைக் கூறவேண்டும் என்பதுதான் எனது அவா.
.

