11-08-2003, 10:52 PM
களத்தில் கருத்துகள் பகிரப்படும் போது சூடான கருத்துக்கள் வருவது சகஜம் ஆனால் கருத்தாடுபவரை அச்சுறுத்தும் பாணியில் கருத்துக்களை முன் வைப்பது ஜனநாயகத்தின் - சன நாய் அகத்தின் உண்மையான வடிவத்தை சொல்வது போல் உள்ளது...தணிக்கை அவர்களே தங்களின் கருத்துக்கள் நாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு உட்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...ஆனால் உங்களை அச்சுறுத்திப் பணிய வைக்க சிலர் முயல்வதை எம்மால் அவதானிக்க முடிகிறது....இது இன்று உங்களுக்கென்றால் நாளை எங்களுக்காக அதிக நேரம் எடுக்காது...எனவே அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது உங்கள் கருத்தை நாகரிகமாக முன்வைத்து உங்கள் பக்க நியாயத்தை எடுத்துரைக்க மறக்காதீர்கள்....அதேபோல்..அச்சுறுத்துவதை விட்டு மற்றவரின் கருத்தோடு இசையாத விடயங்கள சுட்டிக்காட்டிச் செல்லும் கருத்தாடலை மற்றவர்களும் முன்வையுங்கள்...அப்போதுதான் வாசிக்கும் நாம் தெளிவு பெறுவோம்....!
:twisted:
:twisted:
:twisted:
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

