09-20-2005, 04:55 AM
Jude Wrote:சினிமா மக்களை வேகமாக கருத்துமாற்றம் செய்யவல்ல ஊடகம். இதைப்பயன்படுத்தித்தான் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை தம்வசமாக்கின. எம். ஜீ. ஆரும் ஜெயலலிதாவும் முதலமைச்சர் ஆனார்கள்.
அதே சினிமாவை சாதிவெறிக்கெதிராகவும், தமிழில் சங்கீதம் பாடலாம் என்று காட்டவும் கமலஹாசன் பயன்படுத்தினார். \"உன்னால் முடியும் தம்பி\" என்ற படம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பெருளாதார ரீதியில் இது தோல்விப்படம்.
preethi Wrote:படத்தில் இப்படி நடித்தார்,அப்படி ஆடினார், சினிமாவில் இப்படிச் சொன்னார் என்பதையெல்லாம் உண்மையென்று நம்பி அவர் படங்களிலுள்ள மாதிரித் தான் நிஜ வாழ்க்கையிலும் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா?
நீர் இழிச்சவாயனாக இருப்பதால் தான் இப்படி சினிமாவை பற்றி தாழ்வான எண்ணம் கொண்டவராக இருக்கிறீர். டப்பாங்குத்து படங்கள் மட்டும்தான் பார்க்கிறீர் போல இருக்கிறது.
<b>ஜெயலலிதா முதலமைச்சரானதெல்லாம் ஏதோ தமிழருக்கு நன்மை என்ற தொனியில் கதைக்கும் உம்முடன் நான் எதைக் கதைப்பது</b>.
<b>சினிமாதான் தமிழ்நாட்டுத் தமிழரைக் குட்டிச் சுவராக்கி விட்டது. சோற்றுக்கு வழியில்லாமல் one way tiket உடன் தமிழ்நாட்டுக்கு வந்த ரஜனிகாந்த், தமிழன் ராமதாசுக்குத் தமிழ்நாட்டுக்குள் சவால் விடுகிறான், தெலுங்கன் விஜயகாந்த் தமிழன் திருமாவளவனைத் தமிழ்நாட்டுக்குள்ளேயே எதிர்க்கிறான்</b>.
<b>தமிழ்த்தேசியத்தின் தந்தை அண்ணாவின் பெயரிலுள்ள கட்சிக்குத் தமிழ்த்தேசியத்தில் முதல் எதிரி ஜெயலலிதா தலவியாக இருக்கிறார். பெரியாரின் பிரதம சீடர் வீரமணி, பாப்பாத்தி ஜெயலலிதாவுக்கு ராஜகுருவாகிக் கற்பூர ஆரத்தி காட்ட, தமிழ்நாட்டின் வீரத்தமிழர்கள் கை கட்டி, வாய்புதைத்து, காலில் விழுந்தெழுந்து, அம்மா, தாயே, ஆதி பராசக்தியென்று நிற்பதெல்லாம் சினிமா மாயையால் தானே, இது தான் சினிமா தமிழருக்குச் செய்த நன்மை.</b>
(நான் தமிழ்ப்படங்கள் அவ்வளவு பார்ப்பதில்லை. பெரும்பாலான என்னுடைய நண்பர்கள் வட இந்தியர்களும், சீனர்களும் தான்)

