09-20-2005, 03:50 AM
Quote:அந்த தமிழன் பாடல்களை தன் படங்களில் பாடி, பார்ப்பானாக பிறந்து, சாதிகள் இல்லையடி பாப்பா என்று புறப்பட்டு, மயிர்வெட்டும் தொழில் செய்பவனாக காட்டினான் \"உன்னால் முடியும் தம்பி\" என்ற படத்தில். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், பாரதி பாடல்களை பாடினான். \"ஓளவை ஷண்முகி\" படத்தில் பிராமணத்தியாக வந்து சட்டையை திறந்து காட்டி பிராணத்திகளை அவமானப்படுத்தினான் என்று பிராமணர் பொங்கவும் செய்தான். அந்த நடிகன் பெயர் கமலஹசன். போய்க் கேள் அவன் பிராமணணா, தமிழனா என்று. ஏற்கனவே சொல்லியிருக்கிறான் தான் தமிழன் என்று.
<b>படத்தில் இப்படி நடித்தார்,அப்படி ஆடினார், சினிமாவில் இப்படிச் சொன்னார் என்பதையெல்லாம் உண்மையென்று நம்பி அவர் படங்களிலுள்ள மாதிரித் தான் நிஜ வாழ்க்கையிலும் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா?
இதே கமலகாசன் அவருடைய படத்துக்குத் தமிழ்ப்பெயர் வைக்கச் சொல்லிக் கேட்ட தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்துக்கெதிராக பாப்பாத்தியுடன் சேர்ந்து கொண்டு அளித்த திமிரான பதிலை யார் மறப்பார்கள்?</b>

