Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆனந்தசங்கரி விடயத்தில் அவதானம்
#1
கனடா முழக்கம் வார இதழில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்
ஆனந்தசங்கரி விடயத்தில் அவதானம்!

தமிழினத்திற்கு எதிராகக் கனடாவில் இயங்கிக் கொண்டிருக்கும் சிங்கள இனவாத அமைப்பொன்றின் அழைப்பில் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் கனடாவுக்கு வந்திருக்கின்றார்.

அந்த இனவாத அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்திற்குக் கனடிய அரசியலாளர்கள் சிலரும், சிறீலங்காத் தூதரகப் பிரதிநிதியும் அழைக்கப்படிருந்தனர்.

அந்தக் கூட்டம் என்ன கூட்டம்? எதற்காக நடைபெறுகிறது என்று விவரம் சொல்லாமல் 'தமிழ்க் கூட்டம்" நடக்கிறது என்று அழைப்பு விடுத்து, ஆள் எண்ணிக்கைக்காக சில தமிழின உணர்வாளர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். அங்கு போன பின்னர்தான் அக்கூட்டம் கதிர்காமருடைய நினைவு வணக்கக் கூட்டம் என்று தெரிந்திருக்கிறது பலருக்கு.

அக்கூட்டத்தில் ஆனந்தசங்கரி அவர்கள் கதிகாமரின் உயிர் 100,000 விடுதலைப் புலிகளின் உயிருக்குக் கூட சமனானது கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரைக்கொன்ற புலிகளை ஏன் இன்னும் இக்கனேடிய மண்ணில் தடை செய்யாமல் இருக்கின்றீர்கள் என்று கனடிய அரசியலாளர்களை நோக்கிக் கேள்வி எழுப்பி உள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது மக்களால் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஆனந்தசங்கரி அவர்களை சிங்கள இனவாத அமைப்பு கனடாவுக்கு அழைத்து இருக்கின்றது என்றால் அதன் பின்னணியில் என்னவெல்லாம் நடைபெறுகின்றது என்று மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் பெரியவர் தந்தை செல்வா அவர்களுடன் இருந்து அரசியலில் முனைப்புடன் ஈடுபட்ட பலர் தற்போது அவர் கொள்கையை துரிதப்படுத்தும் பாதையைக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

சிலர் இளைய அரசியல் தலைமுறைக்கு வழிவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியும் இருக்கின்றனர். ஆனால் இங்கு சிலர் சிறீலங்காப் பேரினவாத அரசினால் தூண்டப்பட்டு தமிழினத்திற்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் நாசகாரப் பணியாற்றி வருகின்றனர்.

கனடாவில் இயங்கும் சிறீலங்கா தூதரகத்தின் அதிகாரியாக திரு. பூலோகசிங்கம் அவர்கள் இருக்கின்றார். அவர் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் என்பதால் சில யாழ். இந்துக்கல்லூரி நிகழ்வுகளிலும் இதர நிகழ்வுகளிலும் பங்குபற்றி வருகின்றார். அவர் அந்தப் பணியில் இருந்து ஒதுங்கி ஒரு சாதாரண தமிழனாக விழாக்களில் பங்குகொண்டால் யாருக்கும் பிரச்சினை இருக்காது.

ஆனால் தற்போது அவர் விழாக்களுக்கு அழைக்கப்பட்டு பெருமைப்படுத்தப்படும் போது தமிழர்களைக் கொன்றொழித்து வரும் சிறீலங்கா அரசுக்குக் கொடுத்த பெருமையாகவே இருக்கும்.

ரொரன்ரோ கனடாவில் நடைபெற்ற 'பொங்குதமிழ்" நிகழ்வுக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்றால் தமிழர்கள் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. ஆக ஒரு சில வேடதாரிகளும் கைக்கூலிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களின் விருப்புகளையும் இலட்சியங்களையும் அழிக்கும் பணியில் இறங்கியிருக்கின்றார்கள்.

தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் கொள்கையால் இணைந்த தமிழர்களைப் பிரிக்க முடியாது என்பதைக் கனடாவாழ் தமிழர்கள் செயலில் காட்டுவோம். மாவீரர்களுக்கும் தமிழ்த்தேசியத் தலைமைக்கும் என்றும் உண்மையாய் இருப்போம்.

நன்றி: முழக்கம் வார இதழ் (16.09.05)
http://www.tamilnaatham.com/editorial/muzh...am/20050919.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
ஆனந்தசங்கரி விடயத்தில் அவதானம் - by வினித் - 09-19-2005, 08:55 PM
[No subject] - by Birundan - 09-19-2005, 10:50 PM
[No subject] - by kurukaalapoovan - 09-20-2005, 04:27 PM
[No subject] - by Nilavan. - 09-20-2005, 04:53 PM
[No subject] - by kurukaalapoovan - 09-20-2005, 05:11 PM
[No subject] - by Nilavan. - 09-20-2005, 05:27 PM
[No subject] - by kurukaalapoovan - 09-20-2005, 05:42 PM
[No subject] - by cannon - 09-20-2005, 10:00 PM
[No subject] - by preethi - 09-20-2005, 11:41 PM
[No subject] - by விது - 09-21-2005, 03:30 AM
[No subject] - by மின்னல் - 09-21-2005, 04:53 AM
[No subject] - by kurukaalapoovan - 09-21-2005, 07:34 AM
[No subject] - by cannon - 09-21-2005, 05:45 PM
[No subject] - by Anandasangaree - 09-21-2005, 06:10 PM
[No subject] - by Nilavan. - 09-21-2005, 06:31 PM
[No subject] - by Nilavan. - 09-21-2005, 06:37 PM
[No subject] - by cannon - 09-21-2005, 07:00 PM
[No subject] - by Nilavan. - 09-21-2005, 07:10 PM
[No subject] - by cannon - 09-21-2005, 07:37 PM
[No subject] - by sathiri - 09-21-2005, 07:50 PM
[No subject] - by மின்னல் - 09-21-2005, 11:03 PM
[No subject] - by மின்னல் - 09-21-2005, 11:05 PM
[No subject] - by மின்னல் - 09-21-2005, 11:12 PM
[No subject] - by மின்னல் - 09-21-2005, 11:16 PM
[No subject] - by வினித் - 09-22-2005, 12:31 AM
[No subject] - by kurukaalapoovan - 09-22-2005, 05:32 AM
[No subject] - by Vasan - 09-22-2005, 07:09 AM
[No subject] - by Anandasangaree - 09-22-2005, 11:03 AM
[No subject] - by Nitharsan - 09-22-2005, 03:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)