11-08-2003, 12:44 PM
ஐயா சோதரனே பின்னால் பார்க்காதீர்கள். முன்னால் பாருங்கள். வெகு அருகாமையில் ஒளி தெரிகின்றது. அதை நோக்கிச் செல்ல முயற்சியுங்கள். பின்னால் பார்த்தது நடந்து கொண்டிருந்தால் முன்னால் திறந்து வைத்திருக்கும் சாக்கடைக் குழிக்குள் வீழ்ந்து அசிங்கங்களுடன் தான் எழுந்து வர வேண்டிவரும். அத்துடன் மூக்குடைபட வேண்டியும் வரும். சென்ற சில தினங்களில் ஆச்சி மூக்குடைபட்டது போல. ஆதலால் முன்னால் வேகமாச் செல்லுங்கள். ஆனால் நிதானமாகச் செல்லுங்கள். நாம் பல துன்பங்களைக் கடந்து வந்தவர்கள். ஆதலால் தற்போது பாதாளச் சாக்கடைகளைத் திறந்து வைத்து விழும் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே வேகமாய் ஒளியை நோக்கி நடவுங்கள். ஆனால் வெகு நிதானமாய். இனிப் பின்னால் பார்க்க வேண்டிய அவசியம் வராதென்று எண்ணுகின்றோம். துரோகிகளுக்கு படியளப்பவர்கள் பாடம் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனின்றும் வெளியெ வருங்கள். அருகாமையில் தெரியும் ஒளியை நோக்கி எல்லோரும் கை கோர்த்துக் கொண்டு செல்வோம். வெற்றி நிச்சயம். பழையவைகளை மறப்போம். மறுபடியும் மன்னிப்போம். ஆனால் ஏமாறமல் கடமையைச் செய்வோம். எழுதியதையே திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருந்தால் அலுப்படிக்கின்றது. ஆகவே நான் எழுதியதை ஒரு புதுக் கண்ணாடி வாங்கிப் போட்டுக் கொண்டு படித்து விட்டு வாருங்கள். உங்கள் துரோகத் தனங்களுக்கு துணைசேர்க்காமல். நிச்சயமாய் யாரும் வர மாட்டார்கள். எல்லோரும் அடையாளம கண்டிருப்பார்கள்.
களத்தில் உள்ள அதிகமானவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் தான் யாராவது எனது எழுத்தைப் பார்த்து அப்படி எல்லோரையும் சேர்த்து குறை சொன்னதா என்னை குறை சொல்ல வில்லை. மாண்பு மிகு உங்களைத் தவிர.
அன்புடன்
சீலன்
களத்தில் உள்ள அதிகமானவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் தான் யாராவது எனது எழுத்தைப் பார்த்து அப்படி எல்லோரையும் சேர்த்து குறை சொன்னதா என்னை குறை சொல்ல வில்லை. மாண்பு மிகு உங்களைத் தவிர.
அன்புடன்
சீலன்
seelan

