Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழத்தில் தமிழில் வழிபாடு வேண்டும்..
#4
ஆழ்வார்கள் தமிழில் பாடியதால் கோயில்கள் புனிதமாகின என்று பார்த்தோம்.ஆனால்... அதே அழ்வார்கள் பாடிய அதே கோயில்களில் கூட... காலை வேளைகளில் ஒலிக்கிறதே வடமொழி சுப்ரபாதம்!சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்?... அது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம். இன்னும் உங்களுக்கு மாடர்ன் ஆக சொல்ல வேண்டுமென்றால் Good Morning கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம்.அதாவது "Good Morning to God and wake up him"..இன்று பற்பல கோயில்களிலும்... காலை வேளைகளில் ரம்யமான விடியல் போதில்... ஸ்பீக்கரில் போடுகிறார்கள் சுப்ரபாதத்தை. அந்த இசை கேட்கும்போதே நம்மை மயக்குகிறது. ஆனால் அதன் அர்த்தம் உங்களுக்குப் புரியுமா?... என்ன பாடுகிறார்கள் என்று தெரியாமலேயே... அதை நாம் திரும்பப் பாடி முணுமுணுக்கிறோம்.

<b>தினமும் காலையில் அதை டேப் ரெக்கார்டரில் போட்டு விடுகிறோம்.எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் வசீகர குரல் வளத்தால்..."கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்ததது...''என ஆரம்பிக்கிறார். அப்படியே விடியும்வரை கேட்கிறீர்கள்.இது யார் எழுதியது?... இதன் அர்த்தம் என்ன?... தமிழ்நாட்டில் பற்பல பிராமணர் அல்லாதோர் வீடுகளிலும் இந்த சுப்ரபாதப் பாடல் ஒலித்து மயக்குகிறதே... இந்த சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...திருப்பதி வெங்கடேசனை எழுப்பும் இந்த சுப்ரபாதம் ஏன் தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட ஒலிக்கிறது?...என்றெல்லாம் உங்களுக்கு கேள்வி எழ வேண்டும்... அதற்கு பதில் உங்களில் பலருக்கு தெரியாது. இது சத்தியம்</b>.

இந்த சுப்ரபாதத்தை அதாவது சமஸ்கிருத "Good Morning''ஐ இயற்றியவர் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. (மத விஷயங்களில் தன்னோடு வாதம் பண்ண வருபவர்கள் யாராக இருந்தாலும்... தன்னுடைய பயங்கரமான பிரதிவாதம் மூலம் அவர்களை தோற்கடித்து விடுவார் அண்ணா. அதனால்தான் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா என பெயர் பெற்றார்.) இவர் மணவாள மாமுனிகளின் சிஷ்யர்<b>."ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி' </b>என்று வாழ்த்தினாரே அதே மணவாள மாமுனிகளின் சிஷ்யர்தான் அண்ணா.

"கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்தது...'' என்ற இந்த முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து உருவப்பட்டது. அதாவது... விஸ்வாமித்ரர் ராமனை எழுப்புகிறார். "கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா... அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்களை வீழ்த்து...' என ராமனை எழுப்பி அழைக்கிறார் விஸ்வாமித்ரர்.இதை முதல் வரியாக போட்டு... வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியிருக்கிறார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. இவர் இந்த சுப்ரபாதத்தை 14-ம் நூற்றாண்டில் இயற்றினார் என்கிறார்கள்.


ஆனால்... இதே போன்ற சுப்ரபாத வடிவத்தை நாம் இப்போது கேட்கிற சுப்ரபாதம் இயற்றப்பட்டதற்கு அறுநூறு வருஷங்கள் முன்னதாகவே... அற்புதமாக இயற்றியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில்.இனிய தமிழில் <b>"திருப்பள்ளியெழுச்சி' என்றும் பெயர் கொண்ட அந்த பத்து முத்தான பாடல்களை (ஆழ்வார்கள் அருளிச் செயல் புத்தகத்தில் 917 முதல் 926 வரையிலான பாடல்கள்) சிலவற்றை மட்டும் உங்களுக்கு சொல்கிறேன்.தொண்டரடிப் பொடியாழ்வார் காவேரிக் கரையில் படுத்திருக்கும் திருவரங்க பெருமாள் அரங்கநாதனை எழுப்புவதாக இந்த பாடல்களை இயற்றியிருக்கிறார்</b>.

<b>"கதிரவன் குணதிசைச் சிகரம்
வந்துஅணைந்தான்;
கனை இருள் அகன்றதுகாலை அம்
பொழுதாய்மது
விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து
வந்து ஈண்டிஎதிர்திசை நிறைந்தனர்.
இவரொடும் புகுந்த இருங் களிற்று
ஈட்டமும் பிடியொரு முரசும்அதிர்தலில்
அலை-கடல் போன்றுவிது
எங்கும்அரங்கத்தம்மா.
பள்ளி எழுந்தருளாயே</b>...-

இதுதான் தமிழ் திருப்பள்ளியெழுச்சியின் முதல் பாடல்.கதிரவன் கிழக்கின் மேலே முளைத்து விட்டான். இரவின் இருள் அகன்றது... காலைப்பொழுது மலர்கள் பூத்து தேன் சொரிகின்றன. வானத்து தேவர்களும்இ பூமியின் மன்னர்களும்இ பக்தகோடிகளும் நீ பார்க்க தெற்குப் பக்கம் திரண்டிருக்கிறார்கள்.அவர்கள் வந்த யானைத் திரள்கள் எழுப்பும் பிளிற்று ஒசையும்... யானைப் படையின் முரசு ஒலியும் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கிறதே அரங்கா... திருப்பள்ளியை விட்டு எழுகஇ அவர்களுக்கு காட்சி தருக...-<b>என திருவரங்கத்து பெருமானை தமிழால் தட்டி எழுப்புகிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.இங்கே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே... -என தன் இறைவனை அம்மாவென அழைக்கிறார் ஆழ்வார். இந்தப் பாடலில் பக்தி இல்லையா?... சுவை இல்லையா?... இலக்கியம் இல்லையா?.</b>.. அல்லது உங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா?..

.இன்னும் ஒரு தமிழ் திருப்பள்ளியெழுச்சி கேளுங்கள்.

<b>கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன
இலையோகதிரவன் கனை கடல்முளைத்தனன்
இவனோதுடியிடையார் சுரி குழல் பிழிந்து
உதறிதுகில் எடுத்து ஏறினர்.
சூழ்புனல் அரங்காதொடை ஒத்த
துளவமும் கூடையும் பொழிந்துதோன்றிய
தோள் தொண்டரடிப்பொடி என்னும்அடியனை அளியன்
என்று அருளி உன்அடியார்க்கு ஆட்படுத்தாய்!
பள்ளி எழுந்தருளாயே!-</b>

சுற்றிலும் காவிரி நதி சூழ்ந்த அரங்கா. கடலிலே கதிரவன் தோன்ற... குளங்களில் தாமரைப் பூக்கள் சிரித்து மலர்ந்து மணக்கின்றன.சின்னச் சின்ன இடுப்புகளை பெற்ற பெண்கள் காவிரியில் குளித்து... தங்களின் நனைந்த கூந்தலை ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி உதறி... தத்தம் அடைகளை உடுத்தி கரையேறுகிறார்கள்.இப்படிப்பட்ட இளங்காலைப் பொழுதில் தொண்டரடிப் பொடியென்னும் நான் திருத்துழாய் (துளசி) மாலையும்இ பூக்குடலையும் தாங்கி காத்திருக்கிறேன். இந்த அன்பனை ஏற்று அருளி ஆளாக்க வேண்டும்.<b>இந்த தமிழ்பாடலுக்கு என்ன குறைச்சல்?(</b>தொடரும்)
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 09-17-2005, 12:05 AM
[No subject] - by preethi - 09-17-2005, 07:13 AM
[No subject] - by preethi - 09-18-2005, 02:52 AM
[No subject] - by Eelathirumagan - 09-18-2005, 03:07 AM
[No subject] - by preethi - 09-18-2005, 03:08 AM
[No subject] - by preethi - 09-18-2005, 05:00 PM
[No subject] - by preethi - 09-19-2005, 05:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)