09-17-2005, 01:22 PM
narathar Wrote:கடவுளை வழிபட்டா எல்லாம் நடக்கும்..பிறகேன் கஸ்ட்டப் படுவான்.கடவுளுக்கு வழி காட்டிற வழி காட்டிகள் இருக்கினம் அவைக்கு வக்காலத்து வாங்கிற மதம் பிடிச்சவை இருக்கினம்.இது தானே எங்கட கலாச்சாரம் எண்டுறவை இதை மாத்ததையுங்கோ ஐயோ கேள்வி கேக்காதயிங்கோ , எண்டுறவை இருக்கினம்.சுடுறது எண்டா சனத்தை மதம் என்கின்ற போதயில தொடர்ந்து வைக்க விரும்பிற இவய அல்லோ முதலில போட வேணும்.....
தயவுசெய்து செய்தியை திசை திருப்பாதீர்கள்... சாத்திரம் என்பதற்கு..மதச்சாயம் பூசாதீர்கள்...அதுமட்டுமன்றி..நீங்கள் எந்த மதத்தினதும் அடிப்படை புரியாமல்தான் கதை அளந்து கொண்டிருக்கிறீர்கள்..! ஏற்கனவே இன்னொரு பகுதியில் சோழியான் அண்ணா சுட்டிக்காட்டியது போல... இந்து மதத்தின் அடிப்படை என்பது வேதங்கள் சார்ந்து தான் இருக்கிறது... வேதங்களை ஆகமங்களை ஆராய்ந்து சொல்லும் நூல்களைப் படியுங்கள்...உலகெங்கும் மதம் ஒரு பள்ளிப்பாடமாக இருக்கிறது...! சாத்திரம்...மாந்தீரிகம் அப்படி அல்ல...! அது சிலரின் ஏமாற்று வித்தைகள்..அவர்கள் சாமி வேடம் போடுவது மதத்தின் அடிப்படை தெரிந்தல்ல...இப்போ நீங்கள் வாழும் சூழலுக்குள் உள்ள குழப்ப காலத்துக்கு ஏற்ப மக்களை ஏமாற்ற..உங்களை வித்தியாசமாகக் காட்ட... எடுப்பது போல போலி வேடங்கள் தான் அவர்களும் போடக் கற்றிருக்கிறார்கள்.! அதற்குள் மதத்தைப் புகுத்தி மதம் உண்மையில் கொண்டுள்ள ஆழமான மனித வாழ்வியலுக்கு அவசியமான விடயங்களை உங்கள் மேலோட்டமான கருத்து உள்வாங்கல் மூலம் தெளிவற்று உள்வாங்கி தனிப்பட்ட குரோத விசமப் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தாதீர்கள்..அதன் மூலம் உங்கள் கருத்துக்களை வெறுமை ஆக்காதீர்கள்...! சொல்வதைத் தெளிந்து பகுத்தாய்ந்து ஆதாரங்கள் சகிதம் மக்கள் ஏற்கத்தக்க வகையில் முன்வையுங்கள்... அதுதான் அவசியம்..! அதுவே மக்களை தெளிவு படுத்தி வளமான மாற்றத்துக்கு வழிகோலும்..!..!:wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

