Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்
#3
ஹமலையாள மாந்திரீகம்' என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கைகள்?

கொக்குவில் பொற்பதி வீதியில் ஹமலையாள மாந்திரீகம் என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் வீடொன்று நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்டதுடன் அங்கிருந்த ஆட்டோக்கள்இ மோட்டார் சைக்கிள்களும் பெருமளவு உடைமைகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

பொற்பதி வீதி உடையார் ஒழுங்கையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்குப் பின்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:

வவுனியா குருமன்காட்டைச் சேர்ந்த கே.எஸ்.குமாரசாமி (அப்பன்) என்பவர் கடந்த சில வாரங்களாக உடையார் ஒழுங்கையிலுள்ள மிகப் பெரிய ஆடம்பர வீடொன்றை வாடகைக்கமர்த்தி மலையாள மாந்திரீகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

உள்ளூர் பத்திரிகைகள் மூலம் செய்யப்படும் விளம்பரங்களால் அங்கு பலரும் வந்து சென்ற போதும் அங்கு இரவு நேரத்தில் வருவோர்இ போவோர் விடயத்தில் மர்மம் நிலவியதாகவும் அங்கு நடைபெறும் செயல்கள் மர்மமாயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி இந்த வீட்டின் மீது சிறு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றதுடன் மாந்திரீகருக்கு இளைஞர்கள் சிலர் கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

கலாசாரச் சீரழிவில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சமூக விரோதச் செயலில் ஈடுபட வேண்டாமெனவும் எச்சரிக்கப்பட்டபோதும் அதன் பின்பும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் இவர் தொடர்ந்தும் தனது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இரு ஆட்டோக்கள் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களிலும் வேறு வாகனங்களிலும் இங்கு பல பெண்கள் உட்படப்பலர் வந்துள்ளனர்.

இவ்வேளையில் மாந்திரீகரின் ஆடம்பர வீட்டினுள் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொல்லுகள் தடிகள் இரும்புக் கம்பிகளுடன் நுழைந்து வாசல் கேற் பெயர்ப்பலகைகளை அடித்து நொருக்கியவாறு வீட்டினுள் நுழைந்துள்ளனர்.

வீட்டு முன்புறக் கதவுகள் ஜன்னல்கள் அவற்றின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்படவே நிலைமையை உணர்ந்த மாந்திரீகர்இ பின்புறக் கதவால் தப்பியோடியுள்ளார்.

இந்த ஆடம்பர வீட்டினுள் பல அறைகள் இருந்துள்ளன. அவற்றினுள் பல நவீன கட்டில்கள்இ குஷன் மெத்தைகளுடனிருந்ததுடன் ஒவ்வொரு அறைகளினுள்ளும் பெறுமதி மிக்க அலங்காரப் பொருட்களும் ஆடம்பரப் பொருட்களும் தொலைக்காட்சிப் பெட்டிகளும்இ மின் விசிறிகளும் பெருமளவு தளபாடங்களும் பெருமளவு வெளிநாட்டு குடி வகைகளும் பெருமளவு மருந்து வகைகள் (குளிசைகள்) பெண்களின் பெருமளவு ஆடைகளும் பெறுமதிமிக்க நவீன அலங்காரப் பொருட்களும் இருந்துள்ளன.

வீட்டினுள் நுழைந்த இளைஞர் கோஷ்டியொன்று இவை அனைத்தையும் ஒன்றுவிடாது அடித்து நொருக்கி சுக்கு நூறாக்கியதுடன் அனைத்தையும் இழுத்து தீவைத்துக் கொளுத்தியது.

இதேநேரம்இ வீட்டின் வெளியே தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அங்கு நின்ற இரு ஆட்டோக்களையும் இரு மோட்டார் சைக்கிள்களையும்இ சைக்கிள்களையும் அடித்து நொருக்கி தீ வைத்துக் கொளுத்தினர்.

இதனால் வீட்டினுள்ளிருந்த பெறுமதியான பெருமளவு பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகின. ஆட்டோக்களும் மோட்டார் சைக்கிள்களும் சைக்கிள்களும் உருத்தெரியாது எரிந்து சாம்பலாகின.

வீட்டின் ஒரு அறையினுள் ஒரே நேரத்தில் பெருமளவானோருக்கு உணவு வகைகளைத் தயாரிக்கக் கூடிய பெருமளவு பாரிய சமையல் பாத்திரங்களும் இருந்துள்ளன.

அவையும் இந்த இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்டு முற்றாகச் சேதமாக்கப்பட்டன. அதே நேரம்இ அரிசி மூடைகள்இ மா மூடைகள்இ சீனி மூடைகள் பலவும் மரக்கறி வகைகள் உட்பட பெருமளவு உணவுப் பொருட்களும் இருந்துள்ளன.

இவையும் பின்னர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டன. வீட்டுக் கூரை ஓடுகளும்இ சீற்களும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளன.

மாந்திரீகர் பின்புறக் கதவால் தப்பியோடிய போதுஇ அவருடன் ஆண்கள்இ பெண்களும் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாந்திரீகமென்ற பெயரில் இங்கு சட்ட விரோத நடவடிக்கைகள் பல இடம்பெற்று வந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம்இ இங்கிருந்து தப்பியோடிய மாந்திரீகர் தலைமறைவாகியுள்ளார்.

நன்றி தினக்குரல் பிரதான செய்தி.
Reply


Messages In This Thread
யாழ் - by Anandasangaree - 09-17-2005, 09:14 AM
[No subject] - by Anandasangaree - 09-17-2005, 09:15 AM
[No subject] - by Anandasangaree - 09-17-2005, 09:18 AM
[No subject] - by Anandasangaree - 09-17-2005, 09:20 AM
[No subject] - by narathar - 09-17-2005, 09:34 AM
[No subject] - by அகிலன் - 09-17-2005, 09:37 AM
[No subject] - by MUGATHTHAR - 09-17-2005, 09:43 AM
[No subject] - by kuruvikal - 09-17-2005, 10:05 AM
[No subject] - by Anandasangaree - 09-17-2005, 10:25 AM
[No subject] - by narathar - 09-17-2005, 10:25 AM
[No subject] - by narathar - 09-17-2005, 10:39 AM
[No subject] - by ஜெயதேவன் - 09-17-2005, 10:42 AM
[No subject] - by kuruvikal - 09-17-2005, 11:44 AM
[No subject] - by narathar - 09-17-2005, 12:06 PM
[No subject] - by kurukaalapoovan - 09-17-2005, 12:28 PM
[No subject] - by ஜெயதேவன் - 09-17-2005, 12:38 PM
[No subject] - by kuruvikal - 09-17-2005, 01:22 PM
[No subject] - by narathar - 09-17-2005, 02:15 PM
[No subject] - by narathar - 09-17-2005, 02:19 PM
[No subject] - by Anandasangaree - 09-17-2005, 04:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)