Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பதிவுத் திருமணம் அவசியமா?
#4
வணக்கம் சோழியான் அவர்களே...

இந்தத் தலைப்பை கருத்தாடலுக்குக் கொண்டுவரவேண்டும் என்று எண்ணி யாழ் களத்தைத் திறந்தபோது, நீங்கள் முந்திவிட்டது தென்பட்டது. <b>பதிவுத் திருமணம் அவசியமா?</b> என்ற தலைப்பு, யாழ் இணையத்தின் முன்னைய கருத்துக்களத்தில் கருத்தாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட <b>தாலி அவசியமா?</b> என்ற தலைப்பை நினைவுபடுத்துகிறது. அதனைப்போல் இதுவும் நல்ல பல கருத்துக்களை (தனிப்பட்ட மோதல்கள் அல்லாத) வெளிக்கொணர வாழ்த்துக்கள்.

திருமண முறை:
> காதலித்து மாலை மாற்றிக் கொண்டு கூடி வாழ்வது. (காந்தர்வ முறை -- தமிழர் கலாச்சாரமாகக் கருதப்படுகிறது)

> பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றித் தாலி கட்டிக் கூடி வாழ்வது. (ஆரியர் வருகையின் பின் தொடரப்பட்டது)

> நாட்டின் சட்ட ஒழுங்கைப் பின்பற்றி இருபாலாரும் கையொப்பமிட்டு பதிந்து பின் கூடி வாழ்வது. (ஆங்கிலேயர் வருகையின் பின் தொடரப்பட்டது)

இன்று:
> பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றித் தாலி கட்டி, மாலை மாற்றி ஒருமுறையும், பின் கையில் மோதிரங்கள் மாற்றி இரண்டாம் முறையும், அதன் பின் நாட்டின் சட்டத்தைப் பின்பற்றிக் கையொப்பமிட்டு பதிந்து மூன்றாம் முறையும் திருமணங்கள் நடக்கிறது.

> காதலித்து இல்லறத்தில் இணைபவர்கள் மேற்கூறிய மாதிரியோ அல்லது தனியே பதிந்தோ திருமணம் செய்கிறார்கள்.

நிலைப்பாடு:
> மாலைமாற்றி வாழ்ந்தவர்கள் நீண்ட காலம் பிரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். காரணம் காதல். ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள நம்பிக்கை. அதுதவிர இன்னுமொரு காரணம் எழுதப்படாத சமுதாயச் சட்டம் - பண்பாடு/கலாச்சாரம்.

> தாலிகட்டி இணைந்தவர்களும் நீண்ட காலம் பிரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். காரணம், எழுதப்படாத சமுதாயச் சட்டம் - பண்பாடு/கலாச்சாரம். பெண்ணே இதன்மூலம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இது வரலாறு, உண்மை,

> பதிவுத்திருமணம் இணைந்தவர்கள் புரிந்துணர்வு இல்லாதபட்சத்தில் பிரிவதற்குரிய வாய்பளித்திருக்கிறது. மேற்குலகத்தவரைப் பொறுத்தளவில் பெரும்பாலும் பிரச்சினைகள் இல்லை.
ஆனால் தமிழர்களைப் பொறுத்தமட்டில் பதிவுத் திருமணம் என்பது வெறும் போலிதான், தாலிதான் அவர்க்கு வேலி. <b>அதனால் பதிவுத் திருமணம் அவசியமற்றதாகிறது.</b>

* பதிவுத் திருமணம் சட்டத்துக்காகவும், சலுகைகளுக்காகவுமே ஒழிய, இணைந்த வாழ்வுக்கானது அல்ல! இல்லற பந்தத்தில் இணைந்து வாழ நினைப்பவர்க்கு தாலியும் தேவயில்லை, பதிவும் தேவையில்லை.

* பதிவுத் திருமணம் பாதுகாப்புக்காக என்று கருதின், இணைபவர் இருவருக்குள்ளும் நம்பிக்கை இல்லை என்றே பொருள். அப்படி நம்பிக்கையில்லா துணை எதுக்கு? அவரோடு இணைந்த வாழ்க்கை எதுக்கு?

* பதிந்து திருமணம் செய்தாலும் புரிந்துணர்வு இல்லாத கட்டத்தில் பிரிவதற்கு வழியிருக்கும் பொழுது, அதைப் பயன்படுத்திப் பிரிவதைவிட, பதியாமல் வாழ்ந்து பிரிவது பிரச்சினையில்லாதது அல்லவா?

* பதிவுத் திருமணம் மூலம் பெண்கள்தான் பாதுகாக்கப் படுகிறார்கள் என்றால் அது இன்றைய நிலையில் அடிபட்டுப் போகிறது. காரணம் பெண்கள் இன்று ஆண்களில் தங்கியிரா நிலையுள் வந்துகொண்டிருக்கிறார்கள். பிரிந்து செல்லும்போது அவர்களுக்கு சட்டத்தின் சலுகைகள் தேவைப்படாது.

+ பண்பட்ட, தம்மிடைய நம்பிக்கையைக் கொண்டுள்ள சமுதாய அங்கத்துவருக்கு, துணையோடு சேர்ந்துவாழப் பதிவுத் திருமணம் அவசியமல்ல!
+ பண்படாதவர்களாக, தன்னுடைய துணையை நம்பாதவர்களாக வாழ்பவர்களுக்கு மட்டுமே பதிவுத் திருமணம் அவசியம்!

உங்கள் கருத்துக்கள் கண்டு மிகுதி...


Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 11-07-2003, 06:10 PM
வணக்கம் - by இளைஞன் - 11-07-2003, 06:52 PM
Re: வணக்கம் - by AJeevan - 11-07-2003, 08:14 PM
Re: வணக்கம் - by இளைஞன் - 11-07-2003, 09:40 PM
Re: வணக்கம் - by Mathivathanan - 11-07-2003, 10:55 PM
[No subject] - by shanmuhi - 11-08-2003, 12:59 PM
[No subject] - by sOliyAn - 11-08-2003, 01:15 PM
[No subject] - by shanmuhi - 11-08-2003, 03:54 PM
[No subject] - by nalayiny - 11-08-2003, 05:13 PM
[No subject] - by kuruvikal - 11-08-2003, 09:40 PM
[No subject] - by sOliyAn - 11-09-2003, 02:14 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)