09-16-2005, 01:49 PM
அப்ப கலியாணமே ஒரு நாடகம் எண்டுறீர்,அப்ப மணமகனும் மணமகளும் ஏற்படுத்திற ஒப்பந்தம் ஒரு நடிப்பு என்கின்றீர்.உந்தக் கூத்துக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லாட்டி ஏன் இப்படி காசையும், நேரத்தையும் செலவழிப்பான். நீரே முன்னர் கூறியவற்றை மறு தலிக்கிறீர்.ஒரு கலாச்சார நிகழ்வு எமது சமுதாயச் சிந்தனைகளை அடி ஒற்றியதாக இருந்தாலே அது அர்த்தமுள்ளதாகும்,இல்லாவிட்டால் அது நீர் சொன்னதைப் போல் ஒரு நாடகம் தான்.அதுவும் புரியாத பாசயில் நடை பெறும் மர்ம நாடகம்.

