09-16-2005, 01:30 PM
narathar Wrote:ஏன் வைத்தியர் தான் புரோகிதர் அகோணுமோ,ஏன் முடி திருத்துபவர் ஆகேலாதோ,எனது கேள்வி ஏன் பிறப்பால் ஒருவர் ஒரு தொழிலைச் செய்பவர் ஆக வேணும்,சாதியத்திற்கு அடிப்படை அதுவே, இதுவே பிரிவினைக்கு அடித்தளம்.இதற்குப் பதில் அழிக்காமல் வேறெதுவோ பிதற்றுவது எதனால்?
ஈழத்தைப் பொறுத்தவரை... குறிப்பிட்ட விடயங்கள்..பரம்பரை பரம்பரையாக ஒரு பிரிவினரால் செய்யப்பட்டு வந்தன..சில இடங்களில் இன்னும் இருந்தும் வருகிறன...அதற்கான திறமைகள்..அந்தந்த மக்கள் குழுமங்களுக்கு இடையில் இருக்கவும் செய்கின்றன தான்...குறிப்பாக சித்த வைத்தியம் (இப்போ அது பல்கலைக்கழக மருத்துவ பாடமாக்கப்பட்டுள்ளது) இசையில் நாதஸ்வரம் தவில்...(இப்போ அதுவும் பல்கலைக்கழக மட்டத்தில் நுண்கலைப்பிரிவுக்குள் வந்தாயிற்று)..சிகை அலங்காரம்...(அதுவும் இப்போ நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டது...!).. இறந்தவர்களின் கிரிகை செய்வது (அதுவும் இப்போ நிறுவன மயப்படுத்தப்பட்டு விட்டது...!). இப்படி ஒரு காலத்தில் ஒரு சமூக மக்கள் தமக்குள்ளேயே தங்கள் திறமைகளுக்கு ஏற்ப வேலைகளைப் பகிர்ந்து சேவைகள் வழங்கி பொருள் ஈட்டிக்கொண்டனர்..! ஆனால் இப்போ...அப்படி பிரிந்து நின்று சேவைகளை வழங்க வேண்டும் என்ற தேவை இல்லை...எதுவும் யாருக்கும் என்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கிறது...! முன்னர் தொழில் சேவை...என்ற அடிப்படையில் தான் சாதியப்பிரிவுகள் முளைத்தன...அதற்கும் இந்திய பார்ப்பர்ணியத்துக்கும் இன்னும் தொடர்பு வைத்துப் பேசிக்கொண்டிருப்பது பழைய கற்காலத்தை நினைவூட்டுவதாகவே அமைகிறது...!
அந்த வகையில் சமய சேவைக்கும் ஒரு நிறுவனமயப்படுத்தலை செய்யுங்கள்..கோவில்களைப் பொறுத்தவரை சிறிய கோவில்களில் இப்போ புரோகிதர் வைப்பதில்லை...ஊரில் உள்ள ஒரு பெரியவரே செய்கிறார்...செல்வச்சந்நிதி...மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலயம்..கதிர்காமம்...முன்னேச்சரம் என்று...புரோகிதருக்குப் பதிலாக வேறு ஆட்கள் பூசை சேவை வழங்குகிறார்கள்...! கனடாவில் என்ன இங்கிலாந்தில் என்ன...உங்கள் கோயில்களை சமய கலாசார நிறுவனங்களாகத்தான் பதிவு செய்திருக்கிறீர்கள்..! அவர்கள் சொல்லவில்லை புரோகிதரைக் கூட்டி வந்துதான் பூசை செய்ய வேண்டும் என்று...! எவரும் செய்யலாம்...அதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர...அதற்கு பார்பர்ணியத்தையோ...புரோகித சமூகத்தையோ திட்டிப் பிரயோசனம் இல்லை..! இன்று புரோகிதர்களிலும் பல பேர் பல அரச தனியார் துறைகளில் பல்வேறு தொழில் செய்கின்றனர்..அவர்களுக்கும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்..நீங்கள் மாற விரும்பாததற்கு அவர்கள் எதுவும் செய்ய முடியாது...நீங்கள் மாறாதவரை அவர்களும் அண்டிப் பிழைக்கத்தான் செய்வார்கள்..அது அவர்கள் தவறல்ல...!
அதற்காக ஒரு கலாசார நிகழ்வில்...பாரம்பரியத்தை வெளிக்காட்ட புரோகிதரை அழைப்பதில் தவறில்லை...இப்போ ஒரு நாடகத்தில் ஒரு வேடம் போல...அவரும் அந்த நிகழ்வில் வந்து போகட்டும்...அது ஒரு பாரம்பரிய அடையாளத்தை காட்டிச் செல்லட்டும்...! அதனால் பெரிய பாதிப்பு சமூகத்தாக்கம் வந்திவிடும் என்பது நியாயம் அற்ற வாதம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

