Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிபர் சந்திரிகா பணிந்தார்
#1
maalaimalar.com

இலங்கையில் நெருக்கடி நிலை திடீர் ரத்து: அதிபர் சந்திரிகா பணிந்தார்

கொழும்பு, நவ. 7-

இலங்கையில் கடந்த புதன்கிழமை திடீரென நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து ஜனாதிபதி சந்திரிகா உத்தரவிட்டார்.

ராணுவம், உள்துறை மற்றும் செய்தித்துறை களை தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்த அவர் இலங்கை பாராளுமன்றத்தையும் 19-ந்தேதி வரை முடக்கி வைத்து ஆணை பிறப் பித்தார்.

இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அமெரிக்கா வுக்கு சென்றிருந்த நேரத்தில் சந்திரிகா இத்தகைய அதி ரடி நடவடிக்கைகள் எடுத்த தால் அங்கு பதட்டம் உண்டா னது. விடுதலைப்புலிகளுடன் ரனில் நடத்தி வரும் அமைதிப் பேச்சுவார்த்தை நல்ல முன் னேற்றம் பெற்றதால், சந்திரிகா எரிச்சலில் இந்த நடவடிக்கை எடுத்ததாக தெரிய வந்தது.

அடுத்து, அவர் இலங்கை பாராளுமன்றத்தை கலைப்பார் என்று கூறப்பட்டது. இதனால் வடகிழக்கு மாகாணங்களில் இருந்த விடுதலைப்புலிகள் முகாம்களுக்கு திரும்பி மீண்டும் போருக்கு தயாரானார்கள்.

இலங்கையில் அடுத்து, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே நாடு திரும்பினார். காட்டு நாயகே சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் திரண்டு அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

கட்சிக்காரர்களின் வரவேற் பில் நெகிழ்ந்து போன ரனில், விமான நிலையத்திலேயே தனது மந்திரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். பாராளுமன்றத்தை கூட்டியே தீர வேண்டும். "பாராளுமன்றம் முடக்கப்பட்டிருப்பதால் விடுதலைப்புலிகளுடன் நடந்து வரும் அமைதி பேச்சு வார்த்தையில் ஆபத்து ஏற்படும்" என்று நிருபர்களிடம் கூறினார்.

கொழும்பில் வந்து இறங்கியதுமே பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே பதிலடி நட வடிக்கை எடுத்து விட்டதை ஜனாதிபதி சந்திரிகா அறிந்தார். பாராளுமன்றத்தில் தனது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்காது என்பதை உணர்ந்த அவர் இன்று தடாலடியாக பணிந்தார்.

இலங்கையில் கடந்த 2 தினங்களாக அமுலில் இருந்த நெருக்கடி நிலையை (எமர் ஜென்சி) வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இலங்கை அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இதற்கிடையே ஜனாதிபதி சந்திரிகாவின் செய்தி தொடர்பு ஆலோசகர் எரிக் பெர்னாண்டோ இன்று நிருபர்களிடம் கூறுகையில், "ஜனாதிபதி சந்திரிகா பிறப்பித்த நெருக்கடி நிலை உத்தரவு சட்டப்படி கெஜட்டில் வெளியிட முடியாததாகும். எனவே நெருக்கடி நிலை எதுவும் அமுல்படுத்தப்பட வில்லை" என்றார்.

"அப்படியானால் சந்தேகப்படும்படியானவர்களை கைது செய்ய ராணுவத்துக்கு எப்படி அதிகாரம் வழங்கப்பட்டது?" என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த பெர் னாண்டோ, "ஜனாதிபதி வேறு ஒரு தனி உத்தரவு மூலம் அத்தகைய அதிகாரத்தை வழங்கினார்" என்றார்.

சந்திரிகாவின் உதவியாளர் அளித்துள்ள இந்த விளக்கம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இருந்தது.

இலங்கையில் நெருக்கடி நிலை உத்தரவு பிறப்பிக்கப் பட்டதும் ராணுவத்தினர் கொழும்பில் ஆங்காங்கே தடுப்பு ஏற்படுத்தி சோதனை பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணியும் அதிகரிக்கப் பட்டு இருந்தது.

நெருக்கடி நிலை வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து ராணுவத்தினர் ஏற்படுத்தி இருந்த செக்-போஸ்டுகள் விலக்கப்பட்டன. இதனால் கொழும்பில் உள்ள தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
Reply


Messages In This Thread
அதிபர் சந்திரிகா பணிந - by yarl - 11-07-2003, 11:06 AM
[No subject] - by yarl - 11-07-2003, 09:47 PM
[No subject] - by AJeevan - 11-07-2003, 11:32 PM
[No subject] - by anpagam - 11-07-2003, 11:52 PM
[No subject] - by kuruvikal - 11-08-2003, 11:38 AM
[No subject] - by aathipan - 11-08-2003, 12:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)