11-07-2003, 07:18 AM
அவசரகாலசட்டம் வாபஸ்
thatstamil.com
நெருக்கடி நிலை வாபஸ்: சந்திரிகா அறிவிப்பு
கொழும்பு:
இலங்கையில் நேற்று முன் தினம் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை அதிபர் சந்திரிகா குமார துங்கா இன்று திரும்பப் பெற்றுக் கொண்டார். அதே நேரத்தில் ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிக்கத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை இலங்கை அதிபர் மூன்று மூத்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்து, 2 வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தார். இதையடுத்து அவர் அங்கு நெருக்கடி நிலையையும் பிரகடனம் செய்தார். இதையடுத்து கொழும்பில் முக்கிய இடங்களில் ராணுவப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந் நிலையில் இன்று நெருக்கடி நிலையைப் பிரகடனத்தைத் திரும்பப் பெறுவதாக அதிபர் சந்திரிகா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் நெவியல்லி நனயக்கரா தெரிவித்தார்.
அதிபர் சந்திரிகாவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. இந் நிலையில் பிரதமர் ரணில் இன்று நாடு திரும்புகிறார்.