09-15-2005, 09:48 AM
Eelavan Wrote:குருவி
நாவலர் சைவமும் தமிழும் தழைத்தோங்க வந்தவர் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை அவர் சாதியையும் முன்னிறுத்தியது.
வல்வெட்டித்துறைச் சிவன்கோவில் கட்டுவதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தபோது மீனவர்களான அவர்களுக்கு ஏன் சிவன் கோவில் என்று கொச்சையாகக் கேட்டது மாத்திரமன்றி அதனாலேயே சைவம் அழிந்துவிடும் என்று பிரசுரமும் வெளியிட்டவர்.
ஆனால் அவர் தமிழுக்குத் தந்த அரும்பெருங்கொடைகளை மறக்க முடியாது.தமிழ் அச்சுவாகனம் ஏறுவதற்கும் பழைய ஏட்டுச் சுவடிகள் பதிப்பிக்கப்படுவதற்கும்.தமிழின் வரிவடிவத்தில் குற்றுகளுடன் கூடிய ஒற்றுகள் வழக்கத்திற்கு வருவதற்கும் காரணமாக இருந்தவர்.
தமிழ்த்தேசிய முன்னோடியாக இருந்தாலும் நாவலர் கொண்டாடப்படாததற்குக் காரணம் அவரது சாதிப்பற்று
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் ஈழவன்...எத்தனையோ...நல்ல பழமைகளைத் தூக்கி எறிந்துவிட்ட நாம்...நாவலரின் தனிப்பட்ட விருப்பின் பால் (எந்த மனிதனுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருப்பதும் அது வெளிப்படுவதும் இயல்பு...அதை எல்லாம் சமூகம் ஏற்க வேண்டும் என்பது நியதி இல்லையே...!) எழுந்த சாதியம்.. தீண்டாமையை...தூக்கி எறிந்துவிட்டு அவரின் நல்லதை மட்டும் ஏன் காட்ட தயங்குகின்றோம்..இக்களத்தில்..!
நாங்கள் அறிந்த வரைக்கும்.. நாவலர் கல்வி கற்ற கற்பித்த பாடசாலைகள் இரண்டிலும் கண்டதன்படி...சாதியம் தீண்டாமை என்பது எங்கும் காட்டப்பட்டதில்லை...! களைய வேண்டிய பழையதுகளை களையாமல்...புதுமை புகுத்துவதாக அவற்றை சுட்டிக்காட்டி விமர்சித்துக் கொண்டிருப்பதால் கிடைக்கப் போகும் பலன் என்ன...???! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

