09-15-2005, 09:16 AM
குருவி
நாவலர் சைவமும் தமிழும் தழைத்தோங்க வந்தவர் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை அவர் சாதியையும் முன்னிறுத்தியது.
வல்வெட்டித்துறைச் சிவன்கோவில் கட்டுவதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தபோது மீனவர்களான அவர்களுக்கு ஏன் சிவன் கோவில் என்று கொச்சையாகக் கேட்டது மாத்திரமன்றி அதனாலேயே சைவம் அழிந்துவிடும் என்று பிரசுரமும் வெளியிட்டவர்.
ஆனால் அவர் தமிழுக்குத் தந்த அரும்பெருங்கொடைகளை மறக்க முடியாது.தமிழ் அச்சுவாகனம் ஏறுவதற்கும் பழைய ஏட்டுச் சுவடிகள் பதிப்பிக்கப்படுவதற்கும்.தமிழின் வரிவடிவத்தில் குற்றுகளுடன் கூடிய ஒற்றுகள் வழக்கத்திற்கு வருவதற்கும் காரணமாக இருந்தவர்.
தமிழ்த்தேசிய முன்னோடியாக இருந்தாலும் நாவலர் கொண்டாடப்படாததற்குக் காரணம் அவரது சாதிப்பற்று

\" \"