09-15-2005, 07:26 AM
ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை கணப்பொழுதில் நசுக்கி விடலாம் என்ற பெருங் கனவுடன் தான் ஈழ மண்ணில் காலடி எடுத்து வைத்தது இந்திய வல்லாதிக்கம்.ஆனால் அஷிம்சை வழிநின்று இந்தியாவை ஆட்டம் காண வைத்தவர் தியாக தீபம் திலீபன்.
புன்னகை தவழும் உதடு கேட்போரை எழுதில் ஈர்க்கும் பேச்சு பார்ப்பேர் எவரையும் கவரும் வசீகர தோற்றம் என்பவற்றைக் கொண்டவர் திலீபன்.
இராணுவத் தாக்குதல்களாகட்டும் அரசியல் நடவடிக்கைகளாகட்டும் திலீபனின் பங்கு அன்னைய சூழலில் விடுதலைப் புலிகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகின்றது. இவரின் திறமையை இனம்கண்ட புலிகள் இவரை யாழ் மாவட்ட அரசியல்துறை பொருப்பாளராக நியமித்தனர்
1987 ம் ஆண்டு ஜுலை 29ம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் எனும் பெயரில் இந்திய அரசு தனது ராணுவத்தை வடக்கு கிழக்கெங்கும் குவித்தது.
யாழ் கோட்டை வாசலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் திலீபன் உரையாற்றும் போது "இந்தக் கோட்டையில் அந்நியர்கள் இருந்து வருகின்றனர். இந்தக் கோட்டையில் புலிகளின் கொடி பறக்கும் நாள் தமிழருக்கு சுதந்திர நாள். இந்திய உளவுத்துறையான "றோ"விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை ஒழித்துக்கட்ட முயற்சித்து வருகின்றது. தமிழர்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்த தயங்க மாட்டோம்". என மகத் தெளிவாக இந்தியாவிற்கு தெரியப்படுத்தும் விதத்தில் பேசினார்.
ஆயதங்களை எடுப்பதில் இருந்த அக்கறை தமிழர் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்திய அரசிடம் இருக்கவில்லை.இந்திய அரசு தமிழர் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன் பல்வேறு வழிகளில் ஈடுபட்டு வருவதை சகிக்க முடியாத திலீபன் 5 கோரிக்கையை முன்வைத்து இவை 24 மணி நேரத்துள் நிறைவேற்றப்பட வேன்டும் இல்லாவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் இந்திய அரசிற்கு அறிவித்தார்.
இராணுவ முகாம்களிலும் சிறைக்சாலைகளிலும் சித்திரவதைக்குள்ளாகும் எமது சகோதர சகோதரிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும்
புனர்வாழ்வு எனும் பெயரில் தமிழர் பாரம்பரிய நிலங்ளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்களை நிறுத்த வேண்டும்
இடைக்கால அரசு அமைக்கம் வரை பொலிஸ்நிலையங்கள் சிவில் நிர்வாக அமைப்புக்கள் ஆகியவற்றில் சீரமைப்பு எனும் போர்வையில் சிங்கள திணிப்பை நிறுத்த வேண்டும்.
பாடசாலைகளிலும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்.
சிங்கள குண்டர் படையான ஊர்காவலப் படையினைக் கலைத்து அதனிடமிருந்து ஆயுதங்களை திரும்பப் பெற வேண்டும்.
என்ற திலீபனின் 5 கோரிக்கையும் இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்டை தொடர்ந்து 15.09.1987 இல் திலீபன் நல்லூர் கந்தசுவாமி கோவில் வடக்கு வீதியில் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். தியாகப் போரில் ஆகுதியாகிக் கொண்டிருந்த திலீபனின் உண்ணாவிரதத்தைப் பற்றி இந்திய அரசு எவ்வித அக்கறையும் இன்றி இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல திலீபனின் உடல்நிலை மிக மோசமாகி வந்தது. இதனால் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பலர் திலீபனிடம் வேண்டுகோள் விடுத்தனர். திலீபன் தான் எடுத்த இலட்சியத்திலிருந்து இம்மியளவும் விலக மாட்டேன் என தனது இலட்சியத்தில் உறுதியாக நின்றார்.கண்கள் மயங்கி உடல் சுருங்கி அடிக்கடி மயக்கமடையத் தொடங்கிய திலீபனை பார்த்த பலர் தண்ணீர் அருந்தக் கேட்டபோதும் அவர் மறுத்து விட்டர். "நான் தொடங்கிய போர் புனிதமானது.இப்படி நீங்கள் கேட்பதே இந்தப் போராட்டத்தை களங்கப்படுத்துவதாக உள்ளது. தயவு செய்து யாரும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோர வேண்டாம்" என்று உறுதியாக அனைவரிடமும் வலியுறுத்திக் கேட்டார் திலீபன்.
திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் பெண்கள் முதியவர்கள் என மக்கள் வெள்ளம் நல்லூரில் திரண்டது. தொடர்ந்து 12 நாட்கள (265 மணித்தியாலங்கள்) தமிழின விடிவிற்காய் உண்ணாவிரதமிருந்து 26-09-1987 முற்பகல 10.48 மணியளவில் தியாகி திலீபன் தியாக மரணமடைந்தார்.
அவரது மரணம் வெறும் செய்தியாக மட்டும் இருக்கவில்லை. இந்திய வல்லாதிக்கத்கை அதன் கோரமுகத்தை அம்பலப்படுத்தியது