09-15-2005, 04:42 AM
Quote:எனக்கு சரி என்பதை சரி என்கிறேன்,பிழை என்பதை பிழை என்கிறேன் இங்கு எவருக்கும் வக்காலத்து வாங்குவதற்கோ அல்லது எது எனது சமயம் ,சாதி என்கின்ற நிலைகளுக்குள் நின்று கொன்டு நான் கருத்து எழுதவில்லை.அப்படி எழுதுவதானால் நான் வேறு விதமாகத் தான் எழுத வேண்டும்.ஆகவே வரலாற்று உண்மைகளை மறைக்காமல் உண்மை பேசுவோம்.
வருணாச்சிரமத்தைத் தமிழ்ர்களிடையில் அறிமுகப்படுத்திப் பலநூற்றாண்டுகளாக பிரத்தியேக சலுகைகளையும்,அத்தஸ்தையும் அனுபவித்தவர்கள் பார்ப்பான்கள். அப்படியான பார்ப்பான்களுக்கு வக்காலத்து வாங்கிய நாரதர் சாதிக்கொடுமைக்கு வெள்ளாளரைச் சாடுவது சந்தேகத்தை உண்டாக்குகிறது.
பார்ப்பான்களால் அறிமுகப்படுத்தப் பட்ட சாதிப்பாகுபாடு, தமிழர்களை பிரித்துப் பலவீனப் படுத்தியது மட்டுமல்ல, சாதிப்பாகுபாட்டைக் காட்டுவதில் பார்ப்பான்களை விட நாங்கள் ஓன்றும் சளைத்தவர்களல்ல என்று பல தமிழர்கள் நிரூபித்திருக்கிறார்கள். வருணாச்சிரமம் இந்து சமயத்திலிருக்கிறது ஆனால் உண்மையான, தமிழரின் சைவ சமயத்தில் இல்லை. யாழ்ப்பாணச்சைவத்தின் அடிப்படை வேதங்களல்ல. சைவ சித்தாந்தங்களும், ஆகமங்களும்,தேவார திருவாசகங்களும் தான் யாழ்ப்பாணச்சைவத்தின் அடிப்படை. வைதீகத்தின் அடிப்படை தான் வேதங்களும், வருணாச்சிரமும். வருணாச்சிரமத்தின் படி ஈழத்து வெள்ளாளரும் சூத்திரர் தான்.
காஸ்மீரச்சைவம் போல, கன்னடரின் வீரசைவம் போல், ஈழத்தமிழரின் சித்தாந்த சைவமும் வித்தியாசமானது. தமிழரின் யாழ்ப்பாணச் சைவத்தை வைதீகப் படுத்தியது ஆறுமுக நாவலர் தான். வருணாச்சிரமப்படி தான் சூத்திரனாக விரும்பாத நாவலர் "சற்சூத்திரன்" என்ற பதத்தை அறிமுகப் படுத்தினார். அதற்காக நாவலரைக் குறை கூறுவதில் நியாயமில்லை. <b>அவர் இருந்த காலத்தின் கட்டாயம் அது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நாவலருடைய முக்கிய நோக்கம் சைவத்தை கிறிஸ்தவ மிஷனரிமாரிடமிருந்தும், மக்களை மதம் மாற்றுவதில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்த ஆங்கிலே அரசிடமிருந்து காப்பதாகும். சாதியொழிப்பு அவருடைய நோக்கமல்ல சைவத்தைக் காப்பது தான் அவருடைய நோக்கம். அவர் அதில் வெற்றியும் கண்டார்</b>.
நாவலர் இருந்திருக்காது விட்டால், நல்லூர்க கந்தன் இருக்குமிடத்தில் நல்லை மாதா இருப்பார், எங்கள் எல்லோருக்கும் ஒரு ஐரோப்பிய பெயர் முதல் பெயராக இருந்திருக்கும்,
ஆறுமுக நாவலர் அளப்பரிய தமிழ்த் தொண்டும் சமயத் தொண்டும் ஆற்றினார் என்பதில் எந்த அய்யமும் இல்லை. ஆனால் அதன் அடிப்படையில் அவரை ஒரு தமிழ்த் தேசியவாதியாகப் பார்ப்பது, பார்க்க முனைவது பொருந்தாது. மேலும் ஆறுமுகநாவலர் அனைத்துத் தமிழரையும் மொழியின் அடிப்படையிலும் சமயத்தின் அடிப்படையிலும் ஒன்று திரட்டியவர் அல்லர். <b>நாவலர் இருந்த காலத்தை கருத்தில் கொள்ளாது, 150 வருடங்கள் பின்னோக்கிப் போய், நாவலரைச் சாதியை வளர்த்தவர் என்று கூறும் நவீன மிஷனரிமார், கிறிஸ்தவ சமயம் மானுடத்துக்குச் செய்த கொடுமைகளை எண்ணிப் பார்ப்பதில்லை. </b>
தமிழ்த் தேசியத்தின் அடையாளம் மொழி, சமயம் அன்று. அதனால் நான் கிறிஸ்தவத்துக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ எதிர்ப்பல்ல ஆனால் ஒரு விடய்த்தைப் பற்றி விவாதிக்கும் போது பாரபட்சம் காட்டக் கூடாது. <b>இந்த நவீன மிஷனரிமார் சைவசமயத்தின் முதுகிலுள்ள அழுக்கைச் சுட்டிக்காட்டுமளவுக்கு, தங்களின் முதுகிலுள்ள அழுக்கை அவர்களால் பார்க்க முடிவதில்லை. யாராவது அவ்ர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா?</b>
கடந்த நூற்றாண்டு வரை கிறிஸ்தவமும், கிறிஸ்தவர்களும் மானுடத்துக்குச் செய்த கொடுமைகள் எண்ணிலடங்காதவை. சிலுவை யுத்தம் தொடங்கி இரண்டாம் உலகப்போர் வரை சமயத்தின் பேரால் கோடிக்கணக்கான் யூதர்களையும், முஸ்லிம்களையும் கொன்று குவித்தவர்கள் தான் கிறிஸ்தவர்கள்.
சமயத்தின் பேரால் பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை மறுத்தும் பல விஞ்ஞானிகளைக் கொன்றது கிறிஸ்தவம்.
மதத்தின் பேரால் பல அப்பாவிப் பெண்களைப் புதைத்தும், மரத்தூண்களில் கட்டியும் எரித்தது கிறிஸ்தவம்.
நாசிகளையும் ஹிட்லரையும், அவனது concentration campச், Gas chamber எல்லாவற்றையும் ஆசீர்வதித்துத் தொடக்கி வைத்தவர் போப்பாண்டவர் பயஸ்.
யேசு யூதர்களின் மீட்பராக இருக்க விரும்பினார், அவ்ருடைய சீடர்கள் அவரைக் கடவுளாக்கி விட்டார்கள். யேசுநாதர் ஒரு போதும் தான் கடவுள் என்று சொன்னதில்லை. Bible is bundle of contradictions. Paul says one thing and Luke says another and John says something else.
Spanish inquistion, Massacre of millions of American Indians, Colonization etc. எல்லாம் நடந்தது கிறிஸ்தவத்தாலும், கிறிஸ்தவர்களாலும் தான்.
மற்ற மதங்களோடு ஓப்பிடும் போது இந்து சமயம் ஒரு மென்மையான, பொறுமையான, சுதந்திரமான மதம். யாரும் இங்கு தலைவரில்லை, யாரும் எவரையும் கட்டாயப் படித்துவதில்லை. எந்த ஐயருக்கும் பணியத் தேவையில்லை.
கடவுளைக் கூட நிந்திக்கலாம்,
அதற்காக யாருமே எவரையும் கொல்லுவதற்குப் Fatwa விடப் போவதில்லை.

