09-14-2005, 01:38 PM
Quote:தலைப்புக்கு சம்பந்தமானதாக இருக்கும் வரை போராட்டங்களை பற்றி எழுதுவது சரியானதே. கிறிஸ்து அந்த நாட்களில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புரட்சிக்காரன். ரோமருடைய ஆதிக்கத்துக்கும் அவர்களது ஆதிக்கத்துக்கு துணைபோன யுூத மேல்சாதியினருக்கும் எதிராக புரட்சி செய்ததற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு புரட்சிக்காரன் கிறிஸ்து. இன்று கிறிஸ்துவின் பெயரால் ஒரு சமயம் இருக்கிறது. கிறிஸ்துவை மக்கள் வழிபடுகிறார்கள்.
ஈழத்தமிழ் மக்களுக்கு வாழும் தெய்வங்களாகவும் உயிர் கொடுத்த தெய்வங்களாகவும் இருப்பவர்களை வழிபடுங்கள் என்று ஈழத்தமிழ்மக்களின் சமயம் பற்றிய தலைப்பின் கீழ் எழுதுவது மிகப்பொருத்தமானது.
தாயகப் போராட்டத்தை புகுத்துவதனால் சிலவற்றுக்கு விளக்கமளிக்கவென கருத்துகளை முன்வைக்கும்போது, அது போராட்டத்தையே கொச்சைப்படுத்தலுக்கு உள்ளாக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளது. ஆகவே, பலர் தமது கருத்தை நிலைநாட்டும் நோக்கில் ஏனையவர்களை மெளனிகளாக்கும் விதத்தில் தாயகம், போராட்டம், மாவீரர்கள் என்று இழுப்பது இங்கு சர்வ சாதாரணம். அதுதான் சமயத்துள் போராட்டம் வேண்டாம் என்றேன்.
யேசு புரட்சிக்காரனா என்பது வேறுவிடயம்.. ஆனால் அவரும் அப்பத்தின் பகிர்வு, நீரின்மேல் நடப்பு, இறந்தவனது உயிர் மீட்பு போன்ற ஜாலங்களால்தான் மனிதரை ஈர்த்தார்.
வேதாகமத்தில் உள்ள வசனங்களை பகுதியாகவோ முழுமையாகவோ மாற்றக்கூடாது எனக் கூறப்படும்போது, இன்றைய வேதாகமத்தில் சில அத்தியாயங்களே மறைக்கப்பட்டுள்ளன. முடிந்தால் அவைகளை எடுத்து இங்கே போடுங்கள். கருத்தாடல் முழுமையாக இருக்கும்.
Quote:இதோடு சாதி இத்தனை வகை. இந்த சாதி தான் உயர்வானது. இந்த சாதிதான் கர்ப்பகிரகத்துள் வரலாம். இந்த சாதி கோவிலுக்குள்ளேயே வரக்கூடாது என்றும் சொல்கிறது
எங்கும் இப்படிக் கூறப்படவில்லை. கிறீஸ்தவத்தை வேதாகமத்துள் தேடுவதுபோல, இந்தவரிகள் எங்காவது உள்ளதா என இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் போன்ற நான்னு வேதங்களிலும் தேடிக் காட்டுங்கள்... அப்போது உங்கள் புலுடாவை உண்மை என மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.
சைவ சமயமானது ஒரு மனிதனது வாழ்வை நெறிப்படுத்தும் மதம். வாழ்வு நெறியை கதைகளின் மூலம் அவ்வப்போது அடியார்கள் விளங்கப்படுத்தினார்கள். செவி வழிவந்தவை கூட்டியோ குறைத்தோ பரப்பப்பட்டிருந்தாலும், அடிப்படையான வேதங்கள்தான் சமயத்தின் உண்மையை வெளிப்படுத்துபவை. ஆகவே அவற்றை கற்றறிந்துவிட்டு சமயத்தை விமர்சிக்க ஆரம்பியுங்கள்.
"வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே!!!"
.

