09-14-2005, 07:38 AM
sOliyAn Wrote:ஒரு தலைப்பில் உரையாடும்போது.. தாயகத்தையும் போராட்டத்தையும் அதற்குள் புகுத்துவது கேலிக்குரியது. இதைப் பல புகலிட ஊடகங்களும் செய்தன, செய்துவருகின்றன.
தலைப்புக்கு சம்பந்தமானதாக இருக்கும் வரை போராட்டங்களை பற்றி எழுதுவது சரியானதே. கிறிஸ்து அந்த நாட்களில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புரட்சிக்காரன். ரோமருடைய ஆதிக்கத்துக்கும் அவர்களது ஆதிக்கத்துக்கு துணைபோன யுூத மேல்சாதியினருக்கும் எதிராக புரட்சி செய்ததற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு புரட்சிக்காரன் கிறிஸ்து. இன்று கிறிஸ்துவின் பெயரால் ஒரு சமயம் இருக்கிறது. கிறிஸ்துவை மக்கள் வழிபடுகிறார்கள்.
ஈழத்தமிழ் மக்களுக்கு வாழும் தெய்வங்களாகவும் உயிர் கொடுத்த தெய்வங்களாகவும் இருப்பவர்களை வழிபடுங்கள் என்று ஈழத்தமிழ்மக்களின் சமயம் பற்றிய தலைப்பின் கீழ் எழுதுவது மிகப்பொருத்தமானது.
sOliyAn Wrote:தமது கபடங்களை மறைப்பதற்காக.
கத்தோலிக்கத்திலும் தசமபாகம் எனும் முறையில் மக்களிடம் பணம் பெறுவது நிகழ்கிறதுதான். மேற்குலக நாடுகளில் அவர்களது சம்பளப் பணத்திலிருந்து 'தேவாலய வரி'யாக அறவிடப்படுகிறது.
ஆனால்.. சைவமானது நீ ஆலயத்துக்கு வா.. உண்டியலில் பணம்போடு.. கட்டாயம் அர்ச்சனை செய்.. என்று எங்கு வற்புறுத்துகிறது?
சுத்தமாக வா.. கந்தையானாலும் கசக்கிக் கட்டிக்கொண்டு வா என்றுதான் கூறுகிறது.
இதோடு சாதி இத்தனை வகை. இந்த சாதி தான் உயர்வானது. இந்த சாதிதான் கர்ப்பகிரகத்துள் வரலாம். இந்த சாதி கோவிலுக்குள்ளேயே வரக்கூடாது என்றும் சொல்கிறது.
sOliyAn Wrote:ஆறுமுகநாவலர் சைவம் அந்நிய சக்திகளால் மழுங்கடிக்கப்பட்டபோது சில நூல்களை எழுதி சைவத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டாரே ஒழிய, அவரை சமய குரவராக சமயம் ஏற்றுக் கொண்டிருக்கிறதா? அல்லவே! சமயம் சாதியை வளர்த்தது என்றால், நந்தனார் கதையும், கண்ணப்பநாயனார் கதையும் அதற்குள் ஏன் புகுந்துகொண்டன?
நல்ல கேள்வி. தாம் தாழ்த்தி வைத்த சாதியில் உள்ளவர்களும் நிறையவே சமய நம்பிக்கையுடன் செயற்பட்டால் அவர்கள் தாழ்ந்த பிறப்பென்றாலும் ஒரு வேளை விமோசனம் கிட்டலாம் என்று காட்டத்தான் இந்த கதைகள். இல்லாவிட்டால் தாழ்த்தப்பட்ட எல்லாமக்களும் சைவசமயத்தை கைவிட்டுவிடுவார்கள் அல்லவா? இந்த கதைகள் சங்கராச்சாரியார் தலித் மக்களை ஆசீர்வதிப்பது போன்றது.
sOliyAn Wrote:ஈழத்தில் குறிப்பிட்ட சாதியினருக்காக குறிப்பிட்ட தேவாலயங்கள் இயங்கியதை யூட் அறியவில்லைப்போலும்.. தெல்லிப்பளை இளவாலைவாசிகளைக்கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!
கத்தோலிக்கர் மத்தியில் சாதிவெறி உள்ளது உண்மை. நான் ஏற்கனவே அதை எழுதியிருக்கிறேன். படித்துப்பார்க்காமல் பதில் எழுதலாமா?

