09-14-2005, 06:12 AM
preethi Wrote:சிலர் ஏதோ சைவம் மட்டும் தான் இலங்கையில் சாதியைக் கடைபிடிப்பது போல் கதைக்கிறார்கள், உதாரணமாக கரம்பொன் அல்லது பணடத்தரிப்புக் கத்தோலிக்க வெள்ளாளரும், பாசையூர்க் கத்தோலிக்கத் தமிழரை மணம் செய்யப் போவதில்லை. அதனால் சாதி எல்லாச் சமயத்தினரிடமுண்டு. சைவம் மட்டும் விதிவிலக்கல்ல.
தமிழ் கத்தோலிக்கர் சாதிவெறி பிடித்தவர்களாக இருப்பது உண்மை. ஆனால் கத்தோலிக்க சமயமோ, அல்லது எந்த கிறிஸ்தவ சமயமோ, சாதியை சமயத்தின் வழியாக வளர்க்கவில்லை. மாறாக சைவசமயம் (ஆறுமுகநாவலரின் சைவசமய வழிமுறைகளை பாருங்கள்) சாதியை சமயத்தின் பகுதியாக வளர்க்கிறது. கிறிஸ்தவ சமயங்கள், சமய போதனையின்படியும், அதை வளர்த்தவர்களின்படியும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமயங்கள்.
கிறிஸ்தவர்கள் சாதிப்பாகுபாடு காட்டும் ஒவ்வொரு முறையும், தமது சமயத்துக்கு மாறாக நடக்கிறார்கள். அதை தெரிந்தே செய்கிறார்கள். தாம் செய்வது தவறு என்பது அவர்களுக்கு உறுத்திக்கொண்டே இருக்கும். மாறாக சைவசமயிகளுக்கோ ஆறுமுகநாவலர் சொல்லிக்கொடுத்தது போல சாதிப்பாகுபாடு காட்டுவது சமயத்தை பின்பற்றும் சிறந்த வழிமுறைகளுள் ஒன்றாகும்.
<img src='http://www.wischik.com/irene/cross/12-small.jpg' border='0' alt='user posted image'>
<b>புரட்சிக்காரனாக கொல்லப்பட்ட கிறிஸ்து.</b>
<img src='http://www.jaffnacentral.com/images/navalar.gif' border='0' alt='user posted image'>
<b>சாதியை வளர்த்த சைவசமய தலைவர்</b>
இந்த சாதிவெறியை வளர்க்கும் சமயக்கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் விட்டுவிட்டு ஏன் ஈழத்தமிழ்மக்கள், ஈழத்தமிழ் மக்களின் வாழும் தெய்வத்துக்கு கோவில் கட்டி வழிபடக்கூடாது? உண்டியல் பணத்தை போர்க்களத்தில் வாடும் அகதிகளுக்கு கொடுக்கலாமே?.
<img src='http://www.eelavision.com/gallery/5001-8468.jpg' border='0' alt='user posted image'>
<b> ஈழத்தமிழ்மக்களின் வாழும் தெய்வம்</b>
<img src='http://www.karthikai27.com/image/child.jpg' border='0' alt='user posted image'>

