09-14-2005, 12:47 AM
புலத்தில் நான் சாதிவெறியைக் காணவில்லை.. இங்கே ஐயாவைத் தவிர ஏனையவர்கள் யாபேரும் சமமாகத்தான் நடாத்தப்படுகிறார்கள். ஐயாமாரும் இங்கே சாதிப் பாகுபாடு காட்டுவதைக் காணமுடியவில்லை.. தாயகத்தில் ஐயாமார் திவசம் போன்றவைகளுக்காக சிலரது வீடுகளுக்குச் செல்ல மறுக்கும் நிலை இங்கே இல்லை.
ஆனால் புலத்திலுள்ள ஆலயங்களில் சாதி வெறிக்குப் பதிலாக படாடோப வெறியைத்தான் பார்க்க முடிகிறது. அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பானாம். அதைத்தான் பலர் ஆலயங்களில் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பல ஆலயங்களுக்கு பணமுழுக்கு நிகழ்ந்து, நூறு டொலருடன் அகதியாக வந்தவனெலஈ்லாம் இன்று கோடீஸ்வரர்களாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது்
புலத்தில் வெற்று மேலுடன் செல்லும் பக்த கோடிகள்தான் எத்தனை ஆயிரம்.. ஆகா.. இவன்களெல்லாம் கழுத்தில் எத்தனை வளையங்களை பவுணால் போட்டிருக்கிறோம் என்று காட்டி மனம்மகிழ பக்தி ஒரு போர்வை. அவங்க பெண்டாட்டிகளோ.. கழுத்தில் இடைவெளி இல்லாதவாறு பவுண் அடுக்கல்கள்... உண்டியலில் காணிக்கை செலுத்தும்போதும் தேர் போன்ற பெரும் எண்ணிக்கையானவர்கள் உள்ளபோது தாராளச் செலுத்துதல்கள்.. ஆக, இங்கே படாடோப வெறிதான் ஆலய வளர்ச்சிக்கும் புதிய வருகைக்கும் உதவுகிறதே தவிர, சாதிவெறி அல்ல.
ஊரில்கூட, வேளாளன் எனப்படுபவன் பிராமணனுக்கு உதவியாக நின்றானே ஒழிய, வேளாளன் ஆலயத்தில் சாதியை தூண்டவில்லை. அவ்வாறு பார்த்தாலும், ஆலயப் பிரவேசங்கள் கூட்டணியின் தேர்தல் காலங்களில் நிகழ்ந்தபோதெல்லாம் முன்னின்று போராடியவர்களில் பெரும்பகுதியினர் வெள்ளாள இளைஞர்கள்தான்.. நடந்தது என்ன? ஆலயப்பிரவேசம் நிகழ்ந்தது.. ஆனால் ஐயாமார் கொடிக்கம்பத்திலிருந்து மூலஸ்தானம்வரை கம்பி வேலிபோட்டு, வெள்ளாளனையும் வெளியேவிட்டு, அதற்குள் நின்றுகொண்டார்கள்.
இத்தனைக்கும், தாயகத்தில் ஆலய வருமானத்துக்கென வயல், தோட்ட காணிகளை ஆலயத்துக்காக தானமாக ஈந்துள்ளவர்களும் வெள்ளாளர்கள்தான்.

.