Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விசேட அதிரடிப்படை எச்சரிக்கை!
#1
விடுதலைப் புலிகளுக்கு விசேட அதிரடிப்படை எச்சரிக்கை!
[செவ்வாய்க்கிழமை, 13 செப்ரெம்பர் 2005, 16:56 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தொடர்ந்தால் எதிர்த்தாக்குதலில் ஈடுபட நேரிடும் என்றும் சிறிலங்கா விசேட அதிரடிப்படை எச்சரித்துள்ளது.


தாழங்குடாவில் கடந்த 8 ஆம் திகதி இனந்தெரியாத குழுவினர் நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டிருக்கும் விசேட அதிரடிப்படையினர் அத்தாக்குதலில் 10 பேர் பலியானதாக கூறியுள்ளது.
இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் வெளியிட்ட அறிக்கை:

அரசுக்கும் காவல்துறைக்கும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் உதவுகிற வகையிலான பணிகளையே விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகிறோம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக விசேட அதிரடிப்படை செயற்பட்டதில்லை. பக்கச்சார்புடன் அதிரடிப்படை இயங்கியதில்லை. யுத்த நிறுத்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு அதற்கமைய அதிரடிப்படை இயங்கி வருகிறது.

எங்களின் பொறுமையை எவரும் சோதிக்க நினைக்க வேண்டாம் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
விசேட அதிரடிப்படை எச்சரிக்கை! - by வினித் - 09-13-2005, 12:04 PM
[No subject] - by Danklas - 09-13-2005, 12:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)