Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சைவசமயத்தை மேன்மையுறச் செய்த ஆறுமுகநாவலர்
#1
<b>''வேத நான்கிலும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நமச்சிவாயவே"</b>

சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை. தமிழ் மொழியையும் சைவசமயத்தையும் அவற்றுக்கேயுரித்தான கலாசார பண்பாட்டு இயல்புகள் குன்றாத வகையில் வளர்த்த பெருமைக்குரிய மண் தமிழீழ மண் ஆகும்.

அந்நியராட்சிக்காலத்தில் சைவாலயங்கள் இடிக்கப்பட்டு சைவாலயம் அடிமைத்தளையினுள் சிக்கிக் கொண்டிருந்த காலத்தில், நல்லை நகர் ஆறுமுகநாவலர் அவர்கள் சைவசமயத்தையும் தமிழ் மொழியையும் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றி மீண்டும் மேன்மையுறச் செய்தார்.அத்துடன், கடந்த கால யுத்த அனர்த்தங்களின்போது யாழ். குடாநாட்டுக்கிராமங்களில் வாழும் ஏழை மக்களின் வறுமை நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி அரைக்கிலோ அரிசிக்கும் கால்கிலோ பருப்புக்கும் எமது சைவசமயம்பேரம் பேசப்பட்ட நிலையும் யாழ் மண்ணில் நடைபெற்றிருக்கின்றது

"பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும் இறக்கும்போது சைவசமயத்தவர்களாகவே இறப்போம் என்ற உறுதியுடன் செயற்பட்ட குடாநாட்டுக் கிராமங்களில் வாழும் ஏழைச் சைவமக்களை தமிழீழ மண்ணில் சைவசமய வரலாறு என்றும் மறந்துவிட முடியாது.ஆகவே, ஈழ மண்ணுடன் இரண்டறக்கலந்துவிட்ட சைவசமயத்தை ஒருபோதும் பிரிக்கமுடியாது என்பதை வரலாறு நன்கு உணர்த்தியுள்ளது. ஆனால், இவ்வாறு பல முனைப் போராட்டங்களின் உடாக எழுச்சியுற்ற சைவசமயத்தின்மேன்மையானது தற்காலத்தில் கனடாவில் பேணிக்காக்கப்படுகின்றதா என்பது கேள்விக்குரிய விடயமே என்பதை நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


ஈழ்த்தில் ஆறுமுகநாவலர் சைவ ஆகமங்கள் ஒப்பாத வழிபாட்டு முறைகளைக் கண்டித்தார். சிவனே முழுமுதற் கடவுள் என்றும் பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவ சமயம் ஆகாது என்பதும் அவரது வாதமாகும்.

கோயில்கள் ஆகம முறைப்படி அமைய வேண்டுமென்றும் அங்கு வேத பாராணமும் தேவார திருவாசகங்களும் படிக்கப்பட வேண்டும் என்றும் நாவலர் வற்புறுத்தினார்.சைவ சமயத்தில் நிலவிய சிறு தெய்வ வழிபாடு, வாண வேடிக்கை, பிறர் கவனத்தைக் கவர நகையலங்காரம், வர்ணப்பட்டாடை உடுத்தல், மாமிச போசனம், கள் குடித்தல் போன்ற ஆசாரக் குறைவுகளை ஆறுமுகநாவலர் கடுமையாகக் கண்டித்தார்.

<b>கடவுள் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் தனிப்பட்டவர்களால் கையாடப் படுவதை, பணம் பிடுங்கும் மோசடிகளை நாவலர் அம்பலப்படுத்தினார். கோயில் ஊழல்களை நாவலர் அம்பலப்படுத்திய விதம் 'கோயில் பூசாரியைத் தாக்கினேன் கோயில் கூடாது என்பதற்காகவல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாகவிடக் கூடாது என்பதற்காவே" என்ற கலைஞர் கருணாநிதியின் பராசக்தி வசனத்தை நினைவு படுத்துவதாக இருந்தது என ஒரு கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.</b>

<b>தூய சைவ சமயத்தை உயிரைப் பணயம் வைத்துக் காத்த எங்கள் முன்னோர்கள் கனடாவில் இன்றிருந்தால் ஆகமவிதிகளை முற்றாகப் புறந்தள்ளி, மூர்த்தி, தலம் தீர்த்தத்தைக் குழிதோண்டிப் புதைத்து சாராயக் குதங்கள், கிட்டங்கிகள், அங்காடிகள் வணிக நோக்கோடு, சீனர்களின் சமையலறை, பழைய மலகூடம் தனியார் கோயிலாக உருமாறி பணம் பறிப்பதைப் பார்த்து எந்தச் சுவரில் போய் முட்டுவது என்பது தெரியாமல் திண்டாடி இருப்பார்கள்!</b>

<b>யார் ஆறுமுக நாவலரைத் தூற்றினாலும், அவர் சைவத்துக்கும் தமிழுக்கும் செய்த தொண்டு அளப்பரியது, ஆறுமுகநாவலரின் கோபம் முதலில் சைவக் கோயில்களில் ஆகமவிதிப்படி பூசை செய்யத் தெரியாத பிராமணர்கள் மீது திரும்பியது. சைவசமயக் குருமாரிடம் சைவாகம அறிவும், நல்லொழுக்கமும், சிவதீட்சையும், சிவபக்தியும் அருகிக் காணப்பட்டமை சைவத்தின் அலங்கோலத்திற்கும் சீரழிவுக்கும் காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.</b>


சைவக் குருமார் போலல்லாது கிறித்த மதத்தைப் பரப்ப வந்த பாதிரிமார்கள் வேதத்தை நன்கு கற்றவர்களாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும், தொண்டுள்ளம் படைத்தவர்களாகவும் இருப்பதை நாவலர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
<b>நாவலர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்</b>

"சைவசமயிகளே! கிறித்து சமய குருமாராகிய பாதிரிமார்கள் தங்கள் பாஷைகளையும் அதற்கு மூல பாஷைகளையும் இலக்கண இலக்கிய கணித தருக்க பூகோள காகோளாதிகளையும் தங்கள் சமய நு}ல்களையும் படித்துத் தெர்ந்து பரீட்சையிற் சித்திபெற்ற நெடுந்து}ரத்தினின்றும் இங்குவந்து, நம்முடைய தேச பாஷைகளையும் நீதி நு}ல்களையும் சிறிதாயினும் கற்றுப் பிரசங்கிக்கிறார்களே!
<b>உங்கள் சமய குருமாருள்ளே சிலரொழிய, மற்றவர்கள் அந்தியேட்டிப் பட்டோலைதானும், இன்னுஞ் சொல்லின் அந்தியேட்டியென்னும் பெயர்தானும் பிழையற எழுத அறியார்களே! கெட்டி! கெட்டி!! </b>

சிவாகமத்தில் ஒரு சுலோகமாயினுந் தேவார திருவாசகங்களில் ஒரு பாட்டாயினுந் திருவள்ளுவரில் ஒரு குறளாயினும் அறியாத<b> மனிதப் பதர்களுஞ் சைவசமய குருமாராம்! </b>

கண்ட இடங்களிலும் காசுக்காக விநாயகக் கடவுள் விக்கிரமமுஞ் சுப்பிரமணியக் கடவுள் விக்கிரமுஞ் அஞ்சாது வைத்துப் பூசை உற்சவ முதலியன செய்கின்ற அதிபாதகர்களுஞ் குருமாராம்! (இன்று கனடாவில் நடப்பதை ஆறுமுகநாவலர் காண நேர்ந்தால் தலையில் அடி அடி என்று அடித்துக் கொள்வார் என நிச்சயம் நம்பலாம்!)

சமண சமயக் கடவுளாகிய அருகன் மேலே பாடப்பட்ட திருநு}றென்பதற்கும் நிருநீறென்பதற்கும் பேதம் தெரியாமலும் திருநு}ற்றந்தாதியிலே விபூதியின் மகிமை சொல்லப்பட்டிருக்கிறது, அதில் ஒரு புத்தகம் வாங்கித் தரமாட்டீரா என்கின்ற <b>அசேதனதிலகர்களுஞ் சைவசமய குருமாராம்!</b>

'மாணிக்கவாசகர் பாடின திருவாசம் ஒன்று வாங்கினேன், அவர் பாடிய தேவாரம் ஒன்று வாங்கித் தரமாட்டீரா" என்கின்ற <b>மூடசனேந்திரர்களுஞ் சைவசமய குருமாராம்!</b>

'பரமசிவனுடைய ஐந்து முகங்களுள்ளே ஈசான முகம் ஊர்த்துவ முகமென்று சொல்லியிருக்கின்றதே! ஊர்த்துவ முகமாவது அண்ணாந்து கிடக்கின்ற முகமாமே! அப்படியானால் அபிசேகம் பண்ணும் பொழுது தீர்த்தம் மூக்கினுள்ளே போமே! போனால் சுவாமிக்குச் சலதோஷம் கொள்ளுமே! யாது பண்ணலாம்" என்கின்ற <b>அஞ்ஞான சிரோண்மணிகளுஞ் சைவமய குருமாராம்!"</b>

<b>நீங்கள் வருத்திச் சம்பாதித்துக் கொடுக்க அவர்கள் எளிதில் வாங்கி உண்டுடுத்துக்கொண்டு வெட்கம் சிறிதுமில்லாமல் மாப்பிள்ளை மாடுகள் போலத் திரிகின்றார்களே" (ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு - யாழ்ப்பாணச் சமயநிலை) </b>

கொஞ்சம் கண்ணை மூடிக் கொண்டு இதனை வேறு யாரோ படிக்கக் கேட்டால் ஈ.வே.ரா. பெரியார்தான் இப்படி இந்து குருமார்களைத் திட்டுகிறாரோ என்ற ஐயம் மனதில் எழும்!

இது சைவத்தையும், தமிழையும் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து வளர்த்த ஆறுமுக நாவலர் கூறியது.<b> புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள் இப்படியான ஆகமவிதிக்கு அமையாத இடங்களைக் கோயிலென்று போய், சைவாகமங்களை மதிக்காத போலிக்குருமாரை ஆதரித்துப் பாவத்தைத் தேடி சிவநிந்தனை செய்கின்றோம் சிந்தியுங்கள்.........</b>

நன்றி: தமிழ்நாதம்- கனடா
Reply


Messages In This Thread
சைவசமயத்தை மேன்மையுறச் செய்த ஆறுமுகநாவலர் - by preethi - 09-13-2005, 01:16 AM
[No subject] - by kurukaalapoovan - 09-13-2005, 05:44 AM
[No subject] - by RaMa - 09-13-2005, 06:17 AM
[No subject] - by narathar - 09-13-2005, 07:55 AM
[No subject] - by sOliyAn - 09-13-2005, 11:42 AM
[No subject] - by preethi - 09-13-2005, 12:13 PM
[No subject] - by RaMa - 09-13-2005, 02:11 PM
[No subject] - by narathar - 09-13-2005, 03:30 PM
[No subject] - by sOliyAn - 09-14-2005, 12:47 AM
[No subject] - by preethi - 09-14-2005, 02:32 AM
[No subject] - by RaMa - 09-14-2005, 03:57 AM
[No subject] - by preethi - 09-14-2005, 04:03 AM
[No subject] - by Jude - 09-14-2005, 06:12 AM
[No subject] - by sOliyAn - 09-14-2005, 06:52 AM
[No subject] - by Jude - 09-14-2005, 07:38 AM
[No subject] - by வன்னியன் - 09-14-2005, 10:04 AM
[No subject] - by narathar - 09-14-2005, 01:30 PM
[No subject] - by sOliyAn - 09-14-2005, 01:38 PM
[No subject] - by sathiri - 09-14-2005, 03:39 PM
[No subject] - by Jude - 09-15-2005, 03:24 AM
[No subject] - by kuruvikal - 09-15-2005, 04:23 AM
[No subject] - by preethi - 09-15-2005, 04:42 AM
[No subject] - by Eelavan - 09-15-2005, 05:17 AM
[No subject] - by kuruvikal - 09-15-2005, 08:17 AM
[No subject] - by Thala - 09-15-2005, 08:29 AM
[No subject] - by kurukaalapoovan - 09-15-2005, 08:44 AM
[No subject] - by Thala - 09-15-2005, 08:56 AM
[No subject] - by narathar - 09-15-2005, 09:12 AM
[No subject] - by Eelavan - 09-15-2005, 09:16 AM
[No subject] - by narathar - 09-15-2005, 09:43 AM
[No subject] - by kuruvikal - 09-15-2005, 09:48 AM
[No subject] - by narathar - 09-15-2005, 01:21 PM
[No subject] - by Birundan - 09-16-2005, 12:20 AM
[No subject] - by kurukaalapoovan - 09-16-2005, 04:35 AM
[No subject] - by sOliyAn - 09-16-2005, 06:57 AM
[No subject] - by kuruvikal - 09-16-2005, 07:32 AM
[No subject] - by kirubans - 09-16-2005, 07:37 AM
[No subject] - by Birundan - 09-16-2005, 09:33 AM
[No subject] - by narathar - 09-16-2005, 09:58 AM
[No subject] - by kuruvikal - 09-16-2005, 10:25 AM
[No subject] - by Birundan - 09-16-2005, 10:43 AM
[No subject] - by narathar - 09-16-2005, 11:00 AM
[No subject] - by kuruvikal - 09-16-2005, 11:14 AM
[No subject] - by narathar - 09-16-2005, 11:35 AM
[No subject] - by sinnakuddy - 09-16-2005, 11:41 AM
[No subject] - by kuruvikal - 09-16-2005, 11:49 AM
[No subject] - by narathar - 09-16-2005, 01:15 PM
[No subject] - by sOliyAn - 09-16-2005, 01:21 PM
[No subject] - by narathar - 09-16-2005, 01:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)