Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயர்தரப் பரீட்சையில் மோசடிகள் இல்லை
#1
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எவ்வித மோசடிகளும் இல்லை பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க
ஏப்ரல் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எவ்வித மோசடிகளும் இடம் பெறாத நிலையில், அமைதியாக நடைபெற்றது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்தார். பரீட்சை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக திணைக்கள அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் விஜயம் செய்த போது புலிகள் இயக்கத்தினர் அதிகாரிகளை மரியாதையுடன் வரவேற்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான முழு ஒத்துழைப்பை வழங்கினர். இப்பகுதியில் ஒவ்வொரு பரீட்சை நிலையத்திலும் புலிகள் இயக்க உறுப்பினர் பொறுப்பாக இருந்ததோடு மோசடி நடவடிக்கை மற்றும் இடையூறு விளைவிக்க முயன்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் பரீட்சைகளை அமைதியாகவும் முறையாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய புலிகள் இயக்கத்தினருக்கு தான் இத்தருணத்தில் நன்றியையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
உயர்தரப் பரீட்சையில் மோசடிகள் இல்லை - by வினித் - 09-12-2005, 10:14 PM
[No subject] - by RaMa - 09-13-2005, 05:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)