Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யு.எஸ்., ஓபன் டென்னிஸ்
#4
<b>34வது இடத்திற்கு முந்தினார் சானியா மிர்ஸா!</b>

இந்திய டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா, உலக மகளிர் டென்னிஸ் தரப் பட்டியலில் 34வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.இந்திய டென்னிஸ் வரலாற்றில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் சானியா மிர்ஸா சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி படைத்து புதிய இந்திய சாதனையைப் படைத்தார்.

இதுவரை எந்த இந்திய வீராங்கனையும், கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறியதில்லை. அந்த சாதனையை உடைத்த சானியா, காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற துரதிர்ஷ்டவசமாக தவறினார். காலிறுதிக்கு முந்தைய போட்டியில் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவாவிடம் தோல்வியுற்றார் சானியா. இப்போட்டியில் சானியா தோற்றுப் போனாலும் தரப்பட்டியலில் அவருக்கு அட்டகாசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஓபன் போட்டியின்போது உலக மகளிர் தரப் பட்டியலில் 42வது இடத்தில் இருந்து வந்த சானியா தற்போது 34வது இடத்தை எட்டிப் பிடித்துள்ளார். 888.75 புள்ளிகளுடன் சானியா இந்த இடத்தைப் பிடித்துள்ளார். ஆசிய அளவில் முன்னணி வீராங்கனையாக உள்ள ஜப்பானின் அய் சுஜியாமி 32வது இடத்தில் உள்ளார். இன்னொரு ஜப்பான் வீராங்கனையான பெங் ஷுயாய் 33வது இடத்தில் உள்ளார். இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா 148வது இடத்தில் உள்ளார்.

தரப் பட்டியலில் தொடர்ந்து மரியா ஷரபோவா முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் லிண்ட்சே டேவன்போர்ட் 2வது இடசத்தில் உள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்திப் பெண்ணான ஷிகா உபராய் 122வது இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு இவர் 151வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by கீதா - 09-01-2005, 09:33 PM
[No subject] - by RaMa - 09-02-2005, 04:02 AM
[No subject] - by Rasikai - 09-12-2005, 07:58 PM
[No subject] - by adsharan - 09-12-2005, 09:32 PM
[No subject] - by RaMa - 09-13-2005, 04:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)