Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு
#1
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்பதை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும்: தமிழ்க் கார்டியன்
[திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2005, 19:00 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
இலங்கை இனப்பிரச்சனைக்கு ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்பிலே தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்துவை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும் என்று லண்டலிருந்து வெளியாகும் தமிழ்க் கார்டியன் வலியுறுத்தியுள்ளது.


தமிழ்க் கார்டியன் ஆசிரியத் தலையங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

நோர்வே அடித்தளத்தில் உருவாக்க அமைதி முயற்சியை ஒட்டுமொத்தமாக சீர்குலைப்பதுதான் ஜே.வி.பி-மகிந்த ராஜபக்ச ஒப்பந்தம் என்றும் அத்தலையங்கம் சாடியுள்ளது.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ச, ஜே.வி.பியுடன் இணைந்து சிங்களப் பேரினவாதத்தை உயர்த்தி பிடிக்கிறார். அதைப் போலவே ரணில் விக்கிரமசிங்கவும் தேசியக் கோட்பாடு குறித்து அதிகம் பேசத் தொடங்கியுள்ளார் என்றும் கார்டியன் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைத் தீவில் இரத்தத் தெறிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதிப் பேச்சுகளை நடாத்துவதில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகிற நோர்வே அனுசரணையாளர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் விமர்சனங்களை பதிவு செய்திருக்கும் கார்டியன், சிங்களவர்கள் தேச இறையாண்மை என்கிற பெயரில் அம்மக்களை தவறாக வழிநடாத்துவதாகவும் கூறியுள்ளது.

அதிகாரத்தை பற்றிக்கொண்டு எந்தவித சமரசமான போக்குக்கும் இணங்கிவராமல் இருப்பதில் இலங்கையின் பெரும்பான்மை சமூகம் தீவிரம் காட்டி வரும் நிலையில் சர்வதேச சமூகம் இதை அவதானிக்க வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணுங்கள் என்ற சர்வதேச சமூகத்தின் பார்வையில் மாற்றம் அவசியம் தேவை என்றும் கார்டியன் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு - by வினித் - 09-12-2005, 03:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)