11-06-2003, 10:12 AM
செயலுக்கான தருணம் சிங்கள அரசிற்கு வந்துவிட்டது
உத்தேச இடைக்கால வரைபை புலிகள் இயக்கம் சமர்ப்பித்துவிட்டது இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை (ஐளுபுயு) என்று அதற்குப் புலிகள் இயக்கம் பெயர் சூட்டியுள்ளது.
தமிழர் தாயகத்தை நிர்வகிப்பதற்குத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக இந்த மாதிரி வரைபு உருவாக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வதியும் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் அந்த அதிகாரசபை ஆக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் - மனிதஉரிமை - இன ஒற்றுமை என்பவை பேணப்படும் வகையிலும் மதசார்பின்மைக்கு முக்கிய இடமளித்தும் வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவின் ஆட்சியியல் வரலாற்றில் சிறந்ததொரு முன்மாதிரியான ஆட்சியமைப்பைக் கொண்ட ஒரு நிருவாக இயந்திரமாக இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான ஆலோசனை விளங்குகின்றது.
இலங்கைத்தீவின் கடந்த அரை நு}ற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ் மக்கள் இனாPதியாக ஒடுக்கப்ட்ட வரலாற்றை சுருக்கமாக கூறியுள்ள இந்த ஆவணம் அரசியல் hPதியாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட - புறக்கணிக்கப்ட்ட நிலையையும் எடுத்தியம்பியுள்ளது.
இந்த துயரமான வரலாற்று அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இனிமேலும் அத்தகைய அநீதிகளிலிருந்து தமிழ் மக்களை பாதுகாத்து - அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு இட்டுச்செல்லும் இலக்குடன் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான அதிகாரங்கள் கோரப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு மக்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களும் அதற்கான நிதிகளைப் பயன்படுத்துவது உட்பட போரால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் புனர்வாழ்வு-குடியமர்வு-அபிவிருத்தி போன்றவை முழுமையாக செயற்;படுத்தவல்ல நிருவாக இயந்திரமாக இந்த இடைக்கால அதரிகாரசபை அமையும்.
போர்நிறுத்த ஒப்பந்தம் போன்றே இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை பிணக்குகள் இன்றியும் பிணக்குகளைத் தீர்த்தும் இயங்கும் நோக்குடன் சர்வதேச சமூகமும் இந்த அதிகார சபையின் செயற்பாடுகளில் இணைக்கப்பட்டுள்ளது, எனவே முன்னைய காலங்களைப்போல் அல்லாது செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை சிங்கள அரசு அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
எல்லாவற்றிக்கும் மேலாக வடக்கு - கிழக்கின் காணி மற்றும் கடல் சம்பந்தப்பட்ட அதிகாரம் முழுமையாக இடைக்கால அதிகார சபையிடம் இருப்பதால் எமது மக்களின் அன்றாட வாழ்வும் - தொழிலும் பாதுகாப்பனதாகவும் - கௌரவமானதாக மாறும்.
வடக்கு - கிழக்கில் வாழும் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் அச்சங்களைப் போக்கும் வகையில் அவர்களுக்கு அதிகாரசபையில் அங்கத்துவமும் - பங்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் வடக்கு - கிழக்கு மாநிலங்களில் வாழும் அனைத்து மக்களும் சுதந்திரமாகவும் - கௌரவமாகவும் வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அதே நீதியும் - பயன்பாடுகளும் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுக்கும் கிடைக்க வவழிவகை செய்யப்பட்டுள்ளது அனைத்து மக்களையும் அரவணைக்கும் விதத்தில் சட்ட வரைபுகளையும் வழங்கியுள்ளது, சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் கோரியுள்ளது.
இன்றைய நிலையில் தமிழ் மக்கள் முன்னாலுள்ள கேள்வி என்னவென்றால் இந்த திட்டவரைபை சிங்கள அரசு ஏற்றுக் கொள்ளுமா! என்பதேயாகும்.
புலிகளிடம் வட - கிழக்கின் இடைக்கால ஆட்சியை வழங்க, ஐ.தே முன்னணி அரசாங்கம் முன்னரே, வாக்குறுதி அளித்திருந்தது. புலிகள் சமர்ப்பிக்கவள்ள இடைக்கால நிர்வாக யோசனைகளை சாதகமாகப் பரிசீலிக்கப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களும் ஏற்கனவே கூறியுள்ளார்.
தமிழரின் இனப்பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வைப் பொறுத்த வகையில் ரணில் அரசாங்கத்தின் வாக்குறுதிகளும் - கூற்றுக்களும் உண்iயானவையா! அல்லது அவைவெறும் வார்த்தைதானா! என்பதை தமிழ்மக்களும் - உலக சமூகமும் தெரிந்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது.
புலிகள் சமர்ப்பித்துள்ள திட்ட வரைபை சிங்கள அரசு ஏற்றுக்கொண்டு, தமிழ் - சிங்கள இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணும் வகையில் சிங்கள அரசு நேர்மையுடன் செயற்படவேண்டும் என்பதே புலிகள் இயக்கத்தின் விருப்பமாகும்.
நன்றி: விடுதலைப்புலிகள் ஏடு