Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தொட்டி ஜெயா
#1
Ôரொம்ப பேசுறாரு சிம்புÕ என்று சொன்னாலும் சொன்னார்கள். நறுக்கு தெரித்தாற் போல் நாலே வரிகள்! சிம்புவின் டயலாக் பேப்பரில் நாலணா கடலையை மடித்து விடலாம்!

ஆனால், வாய் பேச்சை விட புஜம் பேசுகிறது ஒவ்வொரு காட்சியிலும்! அடிதடி...வெட்டு...குத்து...அம்மாடியோவ்..! இயக்குனர் துரையை ஓரங்கட்டிவிட்டு இரண்டாம் பாதியை ஆக்ரமித்துக் கொள்கிறார் சண்டை இயக்குனர் சிவா!

தொட்டி ஜெயாவாக சிம்பு. அவரின் சின்ன வயசு ஃப்ளாஷ்பேக் கொஞ்சம் ஓவர் என்றாலும் அசத்தல்! சரி... கதைக்கு வருவோம்.

சென்னையிலேயே பெரிய ரவுடியான சீனா தானாவிடம் எடுபிடியாக இருக்கிறார் சிம்பு. அவர் சொன்னார் என்பதற்காக ஒருவனை போட்டு தள்ளிவிட்டு கொல்கத்தாவில் தலைமறைவாகிறார். அங்கே... ரயிலை தவறவிட்ட மாணவி கோபிகாவை விபச்சார சந்தையில் தள்ள முயற்சிக்கிறது ஒரு கோஷ்டி. தன் புஜ பலத்தால் அவர்களை நையப்புடைக்கிற சிம்பு, கோபிகாவை அவரின் சொந்த ஊரான கன்னியாக்குமரிக்கு கொண்டு வந்து விடுகிறார். சிம்புவின் வீரமும், கண்ணியமும் கோபிகாவுக்கு பிடித்துப் போய்விட, காதல்! ஆனால், சிம்பு அந்த காதலை ஏற்றுக் கொள்ளாமல் பஸ் ஏறுகிறார். அவரை படியேற விடாமல் கன்னியாக்குமரிக்கே இழுக்கிறது காதல்! நடப்பது நடக்கட்டும் என்று கோபிகாவுடன் அவர் டூயட் பாட தயாராகிற நேரத்தில் வில்லனாய் நுழைகிறார் கோபிகாவின் அப்பா. அவர் யார்? சின்ன அதிர்ச்சி... அவர்தான் சீனா தானா!

அதன்பின் அரிவாள், கத்தி, துப்பாக்கி, ஹேய்ய்ய்ய்... என்ற கூச்சல்கள். புற்றீசல் போல் வருகிற அத்தனை ஸ்டண்ட் பார்ட்டிகளும் சிகப்பு ரத்தம் வழிய செத்து போகிறார்கள். காது ஜவ்வு கிழிகிறது.

பயம், காதல், அதிர்ச்சி, வெட்கம், இப்படி எல்லா உணர்ச்சிகளையும் கலவையாக்கி கொடுத்திருக்கிறார் கோபிகா. பாவம்... கால் விரல் தேய்கிற அளவுக்கு அவரை ஓட விட்டிருக்கிறார்கள் படம் முழுக்க.

படத்தில் மருந்துக்கு கூட காமெடி இல்லை என்ற குறையை போக்கியிருக்கிறார் அந்த சீனா தானா. என்னதான் வில்லன் என்றாலும் அப்படியா கத்தி தீர்க்க வேண்டும்?

மொத்த படமும் இரவிலேயே நடப்பதால், ராஜசேகரின் கேமிராவிலும், லைட்டிங்கிலும் ஏதோ வித்தியாசம்! ஆனால், நகரம் தாண்டிய கிராமத்து தியேட்டர்களில் என்ன ரிசல்ட் வருமோ?

இசை-ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்களும், பின்னணி இசையும் பலே.

தொட்டி ஜெயா- பட்டிதொட்டிகளை பரவசப்படுத்தும்!

Thanks:Tamilcinema.com
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
தொட்டி ஜெயா - by SUNDHAL - 09-12-2005, 12:31 PM
[No subject] - by Mathan - 09-22-2005, 07:01 PM
[No subject] - by Birundan - 09-22-2005, 07:03 PM
[No subject] - by வெண்ணிலா - 09-23-2005, 01:52 AM
[No subject] - by RaMa - 09-23-2005, 04:05 AM
[No subject] - by SUNDHAL - 09-23-2005, 07:23 AM
[No subject] - by ப்ரியசகி - 09-23-2005, 01:52 PM
[No subject] - by கறுணா - 09-23-2005, 09:32 PM
[No subject] - by Rasikai - 09-23-2005, 09:34 PM
[No subject] - by SUNDHAL - 09-24-2005, 01:23 AM
[No subject] - by sooriyamuhi - 09-24-2005, 02:08 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)