Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஷங்கர் இயக்கத்தில் ரஜனி !
#18
ரஜினிக்கு நம்ம ஊர் ஹீரோயின் இல்லை... பாலிவுட்டில் இருந்து வருகிறார் ஆயிஷா
ஏவி.எம். பட நிறுவனத் தயாரிப்பில் ரஜினி ஷங்கர் இணையும் …சிவாஜி படத்தில் ரஜினியின் ஜொடியாக பாலிவுட்டின் இளம் கதாநாயகி ஆயிஷாதாகியா நடிக்கப் போவது உறுதியாகிவிட்டது.

ரஜினிகாந்த் நடித்த …சந்திரமுகி திரைப்படம் அமோக வெற்றி பெற்று வெள்ளி விழாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. அதே டே;டோடு ரஜினி அடுத்த படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஏவி.எம். பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் முதல் முறையாக டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு …சிவாஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏவி.எம்.-ரஜினி- ஷங்கர் மூவர் கூட்டணி உறுதியான நிலையில் …சிவாஜியில் ரஜினியின் ஜொடி யார்? என்பது முடிவாகாமல் இருந்தது. பாலிவுட் அழகி ஐஸ்வர்யாராய் முதல் ராணி முகர்ஜி திரிஷா என பலரது பெயர்கள் யூகங்களாக வெளியாகின. ஆனால் மூவர் கூட்டணியில் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் ஹாலிவுட் படங்கள் உட்பட ஐஸ்வர்யாராய்க்கு அடுத்தஓராண்டுக்கு கால்ஷீட் தேதிகளே இல்லை என்பதால் ஷங்கரின் வற் புறுத்தலுக்கு அவர் விரும்பினாலும் ரஜினிக்கு ஜொடி சேர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே ஐஸ்வர்யாராயை அழைக்கும் முடிவைக் கைவிட்ட டைரக்டர் ஷங்கர் மும்பையில் வேறொரு சரியான ஜொடியை ரஜினிக்காக தேடுவதில் கடந்த சில நாட்களாக தீவிரம் காட்டி வந்தார். அதில் இப்போது ஷங்கர் வெற்றி பெற்றுவிட்டதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன. …சிவாஜியில் ரஜினிக்கு ஜொடியாக நடிக்க ஷங்கர் தேர்ந்தெடுத்துள்ள நடிகை ஆயிஷா தாகியா பாலிவுட்;டில் மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகை. ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம் பிடித்து வரும் ஆயிஷா இந்தியில் ஒரு படத்துக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

சிவாஜியில் ரஜினிக்கு ஜொடியாக நடிக்குமாறு ஆயிஷாவிடம் ஷங்கர் கேட்டுள்ளார். தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு ஜொடியாக நடிக்க அழைப்பு வந்தபோது அதை மறுத்தவர் ஆயிஷா. இருப்பினும் பே;பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜொடி என்றதும் டைரக்டர் ஷங்கரிடம் ஓகே சொல்லிவிட் டாராம். இதையடுத்து ஆயிஷா விரைவில் சென்னை வருவார் என்றும் மும்பையில் பாலிவுட் வட்டாரங்கள் நேற்று உறுதியாகத் தெரிவித்தன.

சந்திரமுகியில் ரஜனிக்கு புதுமுகம் நயன்தாராவை அறிமுகம் செய்ததில் படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றதுபோல சிவாஜியில் ரஜினி-ஆயிஷா ஜொடியும் பெரும் ஆதரவைப்பெறும் என்று ஷங்கரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகை ஆயிஷா தாகியாவை விரைவில் தமிழ் ரசிகர்களும் தரிசித்து வரவேற்கலாம்
dinakaran.com
விடுப்பு : .
11 Sep 2005
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by தூயா - 08-20-2005, 01:31 PM
[No subject] - by Vishnu - 08-20-2005, 09:54 PM
[No subject] - by vasisutha - 08-20-2005, 10:22 PM
[No subject] - by கீதா - 08-20-2005, 10:47 PM
[No subject] - by Mathan - 08-21-2005, 07:55 AM
[No subject] - by Mathan - 08-21-2005, 08:15 AM
[No subject] - by Birundan - 08-21-2005, 04:30 PM
[No subject] - by SUNDHAL - 08-22-2005, 11:36 AM
[No subject] - by Rasikai - 08-22-2005, 01:28 PM
[No subject] - by Danklas - 08-23-2005, 12:15 AM
[No subject] - by Rasikai - 08-23-2005, 03:35 AM
[No subject] - by Thala - 08-23-2005, 08:21 AM
[No subject] - by SUNDHAL - 08-23-2005, 09:39 AM
[No subject] - by sinnakuddy - 08-23-2005, 10:07 AM
[No subject] - by SUNDHAL - 08-23-2005, 11:10 AM
[No subject] - by வினித் - 09-12-2005, 07:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)