09-11-2005, 05:42 PM
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதியின்றி புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்ற பொலீஸார் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைக்காக மன்னார் சிலாவத்துறை பகுதிக்குச் சென்றபோது விடுதலைப் புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்ட மூன்று பொலிசாரும் விடுதலைப் புலிகளின் காவல்துறையின் பொறுப்பில் இருப்பதாக விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தெரிவிதுள்ளன.
கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் செய்யப்படவுள்ளதாக விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார்.
மன்னார் சிலாவத்துறை பகுதியில் உள்ள அரிப்பு என்ற பிரதேசத்தில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகச் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, விசாரணைக்காகச் சென்ற சிறுவர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சிவில் அதிகாரி ஒருவரும், அவருடன் சென்ற 5 பொலிசார், இது தொடர்பில் உதவிக்காகச் சென்ற இரண்டு கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் இவர்களை ஏற்றிச் சென்ற வாகன சாரதி ஆகிய 9 பேரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் அரிப்பு பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரிப்பு பகுதிக்குச் செல்வதற்கு விடுதலைப் புலிகளின் அனுமதியைப் பெறுவத்றகாக மன்னார் ஆயர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அனுமதி கிடைப்பதற்கு முன்னர் அங்கு சென்றபோதே இவர்கள் விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்டு சிலாவத்துறையில் உள்ள புலிகளின் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை விசாரணை செய்த புலிகளின் காவல்துறையினர் ஆண்களான மூன்று பொலிசாரை மாத்திரம் தடுத்து வைத்துக்கொண்டு ஏனைய ஆறு பேரையும் வாகனத்தையும் விடுதலை செய்ததாகவும், தடுத்து வைக்கப்பட்ட மூன்று பொலிசாரும் கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவினர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது முழுமையாக சாத்தியமாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது
பிபிசி தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>