09-11-2005, 04:12 AM
தொல்காப்பியம் பற்றிய விளக்கத்துக்கு நன்றி.
தேவநேயப்பாவாணர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தமிழுக்கு அவர் செய்யாத தொண்டா?
அவரெதிர்க்காத பார்ப்பணியமா?
மிகமிகக் கடுமையாக பார்ப்பணியத்தையும் சமற்கிருதத்தையும் எதிர்த்து தமிழைக் காத்து, ஏராளமான வேர்ச்சொற்கைளைத் தந்தவர். தமிழிலிருந்தே மற்ற மொழிகளுக்குச் சொற்கள் சென்றன என்றும், பிறமொழிச்சொற்களென்று பலராற் சொல்லப்பட்டவற்றை அவை தமிழ்ச்சொற்கள் தானென்றும் நிறுவியவர்.
அவர் தொல்காப்பியரை ஆரியர் என்று சொன்னதுகூட ஆரியமூளைச் சலவையாய் இருக்குமோ?
ஏனைய தமிழ் நூல்கள் ஆரியரால் எரித்து அழிக்கப்பட்டும், ஏன் தொல்காப்பியர் காலத்து நூல்களும் அதற்குப்பிந்தய நூல்களும்கூட ஆரியரால் எரித்து அழிக்கபட்டும்கூட தொல்காப்பியம் எரிந்தழியாமல் தப்பியதெப்படி என்ற பாவாணரின் கேள்விக்கு எந்தப்பதிலுமில்லை.
தொல்காப்பியர் ஆரியரல்லர் என்று வாதிடும் பண்டிதர் பரந்தாமன்கூட, பாவாணரின் தர்க்கங்களை வெல்லும் வல்லமை எனக்கில்லை. அவரின் கேள்விகள் பதிலளிக்க முடியாதவை என்று என்னிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறார். (தொல்காப்பியர் ஆரியரல்லர் என்று அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார், திருக்குறளில் இருக்கும் வடமொழிச்சொற்கள் என்று பலராற் கூறப்படும் 72 சொற்களை அவை தமிழ்தான் என நிறுவி ஒரு புத்தகம் வெளியிட இருக்கிறார். அதில் இக்கட்டுரையும் வரும்.)
மேலும் ஆரியச்சொற்கள் தமிழிற் கலப்பதை தொல்காப்பியர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதுட்படட பல வலுவான காரணங்களை அவர்கள் வைக்கின்றனர்.
நான் தொல்காப்பியர் ஆரியர்தான் என்பதை என் கருத்தாகச் சொல்லவில்லை. அவர் தமிழராக இருக்கலாம். எனக்கு பரந்தாமன் அவர்களுடனான சந்திப்பின் பின் இது பற்றிய தளம்பல் நிலைதான் இருக்கிறது.
முதலில் ஈழ்த்தில் பார்ப்பனர் என்று நீங்கள் சொல்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?
தம்மைப் பார்ப்பனர் என்று அழைத்துக்கொள்ளும் யாராவது இருந்தாற் சொல்லுங்கள். திட்டமிட்டு இந்த வார்த்தைப்பிரயோகத்தைச் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
மேலும் சர்மா பற்றிய உங்கள் கருத்து சிரிப்பை வரவழைத்தது. பிராமணரல்லாத யாராவது சர்மா என்ற பெயரைத் தங்களுக்கு வைத்ததை நான் கேள்விப்படவில்லை. அப்படியிருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். பின்னெப்படி அவர்கள் பிராமணர்களில்லையென்று சொல்வீர்கள்?
முஸ்லீமல்லாதவன் யார் முஸ்லீம் பெயரை வைத்துள்ளான்? சொல்லுங்கள்.