09-11-2005, 01:52 AM
காசு கொடுத்து ஏமாந்துவிட்டு இங்கே வந்து புலம்புவதில் என்ன அர்த்தம்?
ஈழத்தில் பிராமணர் என்று வலுவான சாதியமைப்பு இல்லை. எனக்குத் தெரிந்து யாழ்ப்பாணத்தில் இல்லை. அவர்கள் இந்தியாவைப்போல் தமக்கென்று தனியான மொழிநடையைக் கூடக் கொண்டிருப்பதில்லை.
சமூகத்திலிருந்து தம்மை வித்தியாசமாகக் காட்டிக்கொள்வதுகூடக் குறைவு.
இந்த நிலையில் ஈழத்துப் பிராமணர்கள் ஈழப்போராட்டத்துக்கு எதிரானவர்கள் என்றும் தமிழுக்கு எதிரானவர்கள் என்றும் கதைவிடுவது விசமத்தனமானது.
அதிலும் ஒருவர் தன் வீரச்சாவடைந்த மைத்துனி பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவென்று சொன்னபோது அவரது பெரையும் ஆதாரத்தையும் தரச்சொல்லிக் கேட்பது சுத்த அயோக்கியத்தனம். குறிப்பாகப் போராளிகளையும் மாவீரர்களையும் இந்தச் சாதிச்சண்டைக்குள் இழுத்து அவர்களின் பெயர்விவரங்களைக் கொண்டு வாதிப்பது.
ஏன் ஈழத்தில் யாரும் பிராமணக்குடும்பத்திலிருந்து வந்து போராடவில்லையென்று சொல்கிறீர்களா?
எத்தனை நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஏன் மாவீரர் பட்டியலில் பார்த்தால் தெரியுமே, குறைந்தபட்சம் சர்மா என்ற ஒட்டுப்பெரோடு எத்தனை பெயர்களுண்டென்று.
அதுசரி, வெளிநாட்டில் தமிழில் ஏன் அர்ச்சனை செய்வதில்லையென்று கேட்கும் நீங்கள், தமிழ் மீட்பு, தமிழ் காப்பு, ஈழமீட்பு என்று கதைவிடும் வன்னியில், புலிகளின் கட்டுப்பாடான வன்னியில் எந்த மொழியில் பூசை நடக்கிறதென்று சொல்லமுடியுமா? அல்லது அங்கே தமிழில்தான் பூசை நடப்பதாக யாராவது வால்பிடிகள் சொல்லிக்கொண்டிருப்பதை நம்பிக்கொண்டிருக்கிறீர்களா?
ஆக மூன்றே மூன்று கோவில்களின்தான் வன்னியில் தமிழில் பூசை நடத்தப்பட்டது, அதுவும் பரீட்சாத்த முயற்சியாக. புலிகளாலேயே இன்னும் தமிழில் பூசை நடத்தும் முறையைக் கொண்டு வரமுடியவில்லை. இதற்குள் புலம்பெயர் நாட்டில் ஏன் மாற்றம் வரவில்லை என்று கேட்பது சுத்த அறிவிலித்தனம் அல்லது விதண்டாவாதம்.
பார்ப்பனியம் என்ற சொல்லை இலங்கையில் பிராமணருக்குப் பொருத்துவது வேடிக்கை.
அதுசரி, தமிழில் இன்றுவரை எமக்குக் கிடைக்கப்பெற்ற நூல்களுள் காலத்தால் முந்தியது எது தெரியுமா? இன்றுவரை அதைவைத்துத்தான் தமிழை வளர்க்கிறார்கள் தெரியுமா? அது தவறான நூல் என்று இன்றுவரை எந்தத் தமிழறிஞனும் மறுக்கவில்லை என்பதோடு அதை வைத்தே தமது வாதங்களையும் ஆராய்ச்சிகளையும் செய்கின்றனர். அதை எழுதியது ஓர் ஆரியப்பார்ப்பனன் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
ஆக, தனியே பார்ப்பனியம் என்பதை ஈழத்தமிழருக்கும் தமிழுக்குமான எதிரி என்று சொல்வதை நான் மறுக்கவில்லை. எனது கருத்தும் அதுதான். ஆனால் அதை ஈழத்தில் பொருத்தி, அடிப்படையில் சக்தியற்ற ஒரு கூட்டத்தை இக்குற்றச்சாட்டுக்குள் கொண்டுவந்து சாடுவது கண்டிக்கப்படவேண்டிது.
மற்றச்சாதிகளாக தாம் நினைப்போரை (கவனிக்க நான் சாதி பிரிக்கவில்லை) மதிக்காத தன்மை, பிராமணரைவிடவும் மற்றவர்களிடம் ஏராளமுண்டு. வாள் தூக்கிச் சண்டை பிடித்ததும் வெட்டுக்கொத்து நடந்ததும் பிராமணர்களிடத்திலா? யாழ்ப்பாணச் சாதித்தடிப்பு பிராமணர்களிடத்தில்தான் இருக்கிறதா?
தமிழுக்காகச் சேவைசெய்து கொண்டிருக்கும் பத்மநாப ஐயரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
ஈழப்போராட்டத்துக்கும் சாதியமைப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை. எல்லாப்பிரிவிலும் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்.
இங்கே புலிகளின் வால்பிடிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு புலிகளின் தலைவர்களால் குறிப்பாக பேபி அண்ணை, தமிழேந்தி அப்பா ஆகியோரின் கூற்றுக்களை வைத்தே என்னால் வாதிட முடியும். அவர்களை நேரிலே அறிந்தவன், அவர்களின் இதுசம்பந்தமான கலந்துரையாடல்களில் இருந்தவனென்ற அடிப்படையில்.