09-10-2005, 07:51 PM
சரி ப்ரீத்தி தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம், நீங்கள் கோட்பாட்டு ரீதியாகத் தர்க்கித்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.
[quote="preethi"]நான் ஒன்றும் இந்து சமயத்தைத் தமிழாக்கச் சொல்லவில்லை தமிழரின் சைவசமயத்தைத் தமிழாக்குங்கள் என்கிறேன்.
ஏன் எமக்கு சைவ சமயம் வேண்டும்? நீங்கள் கூறுவதுபோல் இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகள் முதல் சைவசமயம் தமிழரின் மதமாக இருந்திருக்கலாம்,எனது கேள்வி தமிழரின் மதங்களாக பொவுத்தம்,சமணமும் இருந்தது.ஏன் நாம் ஆயிரம் ஆண்டுகள் பின் நோக்கிச் செல்வான்
தமிழரின் சைவசமயத்தில், வேதங்களுக்கோ ஆதி சங்கரரின் அத்வைதத்துக்கோ இடம் கிடையாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும் கட்டி வளர்த்த தமிழரின் சைவசமயத்தில் அத்வைத பிராமணியத்துக்கு இடம் கிடையாது.
தமிழரின் சைவசமயம் என்று சொல்லும்போது, பார்ப்பான்கள் அறிமுகப் படுத்திய சைவ, வைணவப் பிரிவை நினைத்து விடாதீர்கள்.
அப்படியாயின் நீங்கள் கூறும் சைவசமயத்திற்கும் ,சைவ,வைணவத்திற்கும் என்ன வேறு பாடு?வரலாற்று ரீதியாக எக் காலத்தில் நீங்கள் கூறும் சைவ மதம் இருந்தது?
வேங்கடமும், தென்குமரியும் தமிழரின் நாட்டின் எல்லைகள், வேங்கடத்தானும், மாயோனும், சேயோனும், கொற்றவையும், குறிஞ்சிக் குமரனும், அரனும், தமிழரின் கடவுளர்.
நீங்கள் கூறும் கடவுளர்கள் சங்க காலத்தில் அல்லவா இருந்தனர்,இவர்களைப் பற்றி சமயக் குரவர்கள் தேவாரம் பாடவில்லயே,அவர்கள் பாடியது தோடுடய செவியன் அல்லவா,இவர்கள் வாழ்ந்தகாலம் சங்க காலம் அல்லவே?
திரு ஞான சம்பந்தர் ஒரு பிராமணர் என்கின்றீர்கள் ,அப்ப அவர் வளர்த்த சமயம் என்ன சமயம்? இவர் சமணத்திற்கும்,பவுத்தத்திற்கும் எதிராக அல்லவா ,மதவெறியைய்க் கட்டவிழ்த்துவிட்டவர்?மணிமேகலை,சிலப்பதிகாரம் என்கின்ற பொவுத்த தமிழ் நூல்கள் இக் காலத்தில் அல்லவா அழித்து ஒழிக்கப்பட்டன?
இன்று எமக்கு ஏன் தேவைய் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய சமயம்,இது அக் காலத்தில் நிலவிய சமூக அமைப்பு முறைகளுக்கு பொருத்தமானதாக இருந்திருக்கலாம்,அதுவே இக் காலத்திற்கும் பொருந்தும் என்று எவ்வாறு சொல்கிறீர்கள்? நாங்கள் புலத்தில் கோவில்களைக் கட்டாமல்,தமிழ் பாடசாலைகளயும், நூல் நிலயங்களையும்,கலை பண்பாட்டு நிலயங்களயும் அமைக்கலாம் அல்லவா?எமது மதமாக, நல் வழியாக மனித நேயத்தையும்,சகோதரத்துவத்தயும்,சம தர்மத்தையும் பின் பற்றலாம் அல்லவா?அறிவியல் ரீதியாக எமது சமுதாயத்தை வழி நடாத்தலாம் அல்லவா?எவ்வளவு காலத்திற்கு பழங்கதை ,பழம் பெருமை பேசி இருக்கப் போகிறோம்?